கனமழை காரணமாக மலேசியாவில் காய்கறிகள், கடல்உணவு விலை அதிகரிப்பு

கனமழை காரணமாக மலேசியாவில் காய்கறிகள், கடல்உணவு விலை அதிகரிப்பு

3 mins read

மலே­சி­யா­வில் கன­மழை பெய்து வரு­வ­தால் அந்­நாட்­டில் காய்­கறி விளைச்­ச­லும் மீன்­பி­டித் துறை­யும் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இத­னால் அந்­நாட்­டில் காய்­க­றி­கள், கடல்­உ­ணவு வகை­கள் ஆகி­ய­வற்­றின் விலை அதி­க­ரித்­துள்­ளது.

இதே நிலை நீடித்­தால் சீனப் புத்­தாண்டு விடு­மு­றை­யின்­போது இவற்­றின் விலை மேலும் அதி­

க­ரிக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வட­கி­ழக்கு பரு­வ­ம­ழைக்­கா­லம் கார­ண­மாக கன­மழை பெய்து அறு­வடை வெகு­வா­கக் குறைந்­தி­ருப்­ப­தாக மலே­சிய காய்­க­றி விவ­சா­யி­கள் சங்­கங்களின் சம்மே­ள­னத் தலை­வர் லிம் செர் குவீ கூறி­னார்.

"அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்­குத் தொடர்ந்து கன­மழை பெய்­தால் சீனப் புத்­தாண்­டின்­போது காய்­க­றி­க­ளின் விலை நிச்­ச­யம் அதி­க­ரிக்­கும்.

"கன­மழை பெய்­யும்­போது அறு­வடை பாதிக்­கப்­ப­டு­வ­தால் இந்த நிலை ஏற்­ப­டு­கிறது.

"அது­மட்­டு­மல்­லாது, சிங்­கப்­

பூ­ரில் பள்ளி விடு­முறை தொடங்­கி ­விட்­டதை அடுத்து, அங்­கி­ருந்து பலர் மலே­சி­யா­வுக்கு வந்து காய்­

க­றி­களை வாங்­கிச் செல்­கின்­ற­னர். இத­னால் மலே­சி­யா­வில் காய்­க­றி­கள் குறைந்­து­விட்­டன," என்று அவர் தெரி­வித்­தார்.

அண்­மை­யில் மலே­சி­யா­வில் காய்­க­றி­க­ளின் விலை 10 காசு முதல் 20 காசு வரை அதி­க­ரித்­

தி­ருப்­ப­தா­க­வும் வெள்­ளம் ஏற்­பட்­டால் விலை மே­லும் அதி­க­ரிக்­கும் என்­றும் கோலா­லம்­பூர் காய்­க­றி­ மொத்த வியா­பா­ரி­கள் சங்­கத்­தின் தலை­வர் வோங் கெங் ஃபாட் கூறி­னார்.

"காய்­க­றி­க­ளின் விலை இவ்­வா­ரம் ஏற்­றம் கண்­டுள்­ளது. விலை மேலும் அதி­க­ரிக்­கும். கன­மழை தொடர்ந்­தால் அடுத்­த­டுத்த வாரங்­களில் காய்­க­றி­க­ளின் விலை ஏற்­றம் காணும்.

"அத்­து­டன் வெள்­ளம் ஏற்­பட்­டால் காய்­க­றி­கள் விளைச்­ச­லும் விநி­யோ­க­மும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­படும். அவ்­வாறு நேர்ந்­தால் சீனப் புத்­தாண்­டின்­போது அவற்­றின் விலை அதி­க­ரிக்­கும்," என்­றார் திரு வோங்.

காய்­க­றி­க­ளின் மொத்த வியா­பார விலை அதி­க­ரித்­தி­ருப்­பதை திரு வோங் சுட்­டி­னார். கடு­குக் கீரை­யின் விலை மூன்று ரிங்­கிட்­டி­லி­ருந்து 5.50 ரிங்­கிட்­டாக அதி­க­ரித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"இவை வெறும் மொத்த வியா­பார விலை­கள். சில்­லறை வியா­பார விலை­கள் இதை­விட அதி­க­மாக இருக்­கும்," என்று திரு வோங் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, மோச­மான வானிலை, கொவிட்-19 நெருக்­கடி­ நி­லைக்­குப் பிறகு அதி­க­ரித்­தி­ருக்­கும் தேவை ஆகி­யவை கார­ண­மாக மீன்­க­ளின் விலை­யும் அதி­

க­ரித்­தி­ருப்­ப­தாக கடல்­உ­ணவு விநி­யோக நிறு­வ­ன­மான நார்த் ஓஷன் ஹோல்­டிங்­ஸின் இயக்­கு­நர் கேன்­டிஸ் கோ தெரி­வித்­தார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தும் பெரும் அள­வி­லான ஒன்று­கூ­டல்­கள் மீண்­டும் களை­கட்­டி­ய­தால் கடல்­உ­ணவு வகை­க­ளுக்­கான தேவை­ அதி­

க­ரித்து அவற்­றின் விலை ஏற்­றம் கண்­ட­தாக அவர் கூறி­னார்.

சீனப் புத்­தாண்­டின்­போது கடல்­உ­ணவு வகை­க­ளின் விலை மேலும் அதி­க­ரிக்­கும் சாத்­தி­யம் அதி­கம் உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக வானி­லைப் போக்கு மாறி வரு­வ­தால் மீன்­பி­டித் துறை வெகு­வா­கப் பாதிப்­ப­டைந்­தி­ருப்­ப­தாக திரு­வாட்டி கோ கூறி­னார். முன்­பு­போல அதிக மீன்­கள் வலை­களில் சிக்­கு­வ­தில்லை என்­றார் அவர்.

"பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு, செப்­டம்­பர் மாதத்­துக்­கும் அக்­டோ­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் கட­லி­லி­ருந்து கடல்­

உ­ணவு வகை­கள் நிறைய கிடைக்­கும். ஆனால் தற்­போது தொடர்ந்து கன­மழை பெய்­கிறது. பலத்த காற்று கார­ண­மாக கட­லுக்­குச் சென்று மீன் பிடிக்க முடி­ய­வில்லை. வழக்­க­மாக இக்­க­டற்­ப­கு­தி­யில் இருக்­கும் மீன்­களும் வேறு பகு­தி­க­ளுக்­குச் சென்­று­விட்­டன.

"அது­மட்­டு­மல்­லாது, மீன்­பி­டித் திறன் கொண்ட வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­து­வ­தும் சிர­ம­மா­கி­விட்­டது. அவர்­களில் பலர் தாய்­லாந்­தைச் சேர்ந்­த­வர்­கள். மலே­சிய ரிங்­கிட்­டின் மதிப்பு குறைந்­தி­ருப்­ப­தால் அவர்­களை வேலைக்கு எடுக்க அதி­கம் செல­வா­கிறது," என்­றார் திரு­வாட்டி கோ.