'அம்னோவைப் பதிவு நீக்கம் செய்யும் சதி முறியடிக்கப்பட்டது'

'அம்னோவைப் பதிவு நீக்கம் செய்யும் சதி முறியடிக்கப்பட்டது'

2 mins read

அம்னோ கட்சி சட்­ட­வி­ரோ­த­

மா­னது என்று அறி­வித்து அதைப் பதி­வு ­நீக்­கம் செய்­யக் கோரி சமர்ப்­பிக்­கப்­பட்ட மனுவை மலே­சிய உள்­துறை அமைச்சு நிரா­

க­ரித்­து­விட்­ட­தாக அக்­கட்­சியின் தலை­வ­ரும் மலே­சி­யத் துணைப் பிர­த­ம­ரு­மான அக­மது ஸாஹிட் ஹமிடி தெரி­வித்­துள்­ளார்.

அம்­னோ­வின் கதையை முடிக்க தீட்­டப்­பட்ட சதி

முறி­ய­டிக்­கப்­பட்­ட­தாக அவர் செய்தியா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

அம்­னோ­வைப் பதி­வு­ நீக்க கோரி­ய­வர்­க­ளின் பெயர்­களை திரு ஸாஹிட் வெளி­யி­ட­வில்லை.

"அம்­னோ­வைத் தடை செய்ய மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சியை ஒரு­வர் முறி­ய­டித்­துள்­ளார்," என்று மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற மலே­சிய சீன மக­ளிர் தொழில்­மு­னை­வர் சங்­கத்­தின் பத்­தா­வது ஆண்­டு­வி­ழாக் கொண்­டாட்­டங்­களில் கலந்­து­கொண்ட திரு ஸாஹிட் தெரி­வித்­தார்.

திரு ஸாஹிட் குறிப்­பிட்ட அந்த ஒரு­வர், மலே­சி­யா­வின் புதிய உள்­துறை அமைச்­சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் ஆவார்.

அம்­னோ­வைத் தடை செய்ய முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கையை நிரா­க­ரித்த அமைச்­சர் சைஃபுதீனுக்கு திரு ஸாஹிட் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

அம்­னோ­வுக்­குப் பதி­லா­கச் செயல்­பட பெர்­சத்து கட்சி நிறு­வப்­பட்­ட­தா­க­வும் அந்த இலக்கை பெர்­சத்து அடைந்­து­விட்­டதை அண்­மை­யில் நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்­தல் முடி­வு­கள் காட்­டு­வ­தா­க­வும் பாகாங் மாநில பெரிக்­காத்­தான் நேஷ­னல் தலை­வர் சைஃபுதீன் அப்­துல்லா கூறிய கருத்­து­க­ளுக்­குப் பதி­லடி தரும் வகை­யில் திரு ஸாஹிட்­டின் உரை அமைந்­தது.

"அம்­னோவை ஓரங்­கட்­டும் அள­வுக்கு பெர்­சத்து கட்சி வள­ர­வில்லை. அம்­னோ­வைத் தடை செய்­வது மட்­டும் அக்­கட்­சி­யின் இலக்­கல்ல. இதை அம்னோ

கட்­சி­யி­ன­ரும் மலே­சி­யர்­கள் அனை­வ­ரும் உணர வேண்­டும்.

"பெரிக்­காத்­தான் நேஷ­னலை அம்­னோ­வின் அடித்­தள உறுப் பி­னர்­கள் அனை­வ­ரும் ஒன்றி ணைந்து, முழு­மை­யாக

நிரா­க­ரித்து ஒதுக்கிவிட வேண்­டும் என்று திரு ஸாஹிட் கேட்டுக்கொண்டார்.