திருமணங்களையொட்டிய மதமாற்றங்களுக்குத் தடை விதித்த இந்திய மாநிலங்கள்

திருமணங்களையொட்டிய மதமாற்றங்களுக்குத் தடை விதித்த இந்திய மாநிலங்கள்

1 mins read

திரு­ம­ணங்­க­ளை­யொட்­டிய மத­

மாற்­றங்­க­ளுக்கு 11 இந்­திய

மாநி­லங்­கள் தடை விதித்­துள்­ளன.

அந்த மாநி­லங்­க­ளின் சட்­டத்­தின்­கீழ், வேறொரு சம­யத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரைக் கரம்­பி­டிக்கும் ஒருவர் தமது கணவர் அல்லது மனைவியின் மதத்­துக்கு மாறி­னால் அது சட்­ட­வி­ரோ­த­மா­கி­வி­டும்.

அது­மட்­டு­மல்­லாது வற்­பு­றுத்தி, ஆசை­காட்டி ஒரு­வரை மதம் மாற வைப்­ப­தும் அந்த மாநி­லங்­களில் சட்­ட­வி­ரோ­த­மாக்­கப்­பட்­டுள்­ளது.

பல சமய மக்­க­ளைக் கொண்ட இந்­தி­யா­வில், தேசிய அள­வில் மத­மாற்­றத்­துக்கு எதி­ரான சட்­டம் இல்லை. ஆனால் மத­மாற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் பல மாநி­லங்­கள் தீவி­ரம் காட்­டு­

கின்­றன. 2017ஆம் ஆண்­டி­லி­ருந்து ஜார்­கண்ட், உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், ஹரி­யானா, உத்­

த­ராகண்ட், இமாச்­ச­லப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­கள் திரு­ம­ணங்­

க­ளை­யொட்­டிய மத­மாற்­றத்­துக்­குத் தடை விதித்­துள்­ளன.

மத­மாற்­றத்­துக்கு எதி­ரான சட்­டங்­களில் பெரும்­பா­லா­னவை பார­திய ஜனதா கட்­சி­யின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் மாநி­லங்­களில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

தென்­னிந்­தி­யா­வில் கர்­நா­டக மாநி­ல­மும் திரு­ம­ணத்­தை­யொட்­டிய மத­மாற்­றத்­துக்­குத் தடை விதித்­துள்­ளது. பண ஆசை­யைக் காட்டி அப்­பாவி மக்­களை சில அமைப்­பு­கள் மதம் மாறத் தூண்­டு­வ­தாக அம்­மா­நில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை கடந்த ஆண்டு தெரி­வித்­தார். மதம் மாறிய இந்­துக்­கள் மீண்டும் இந்து சம­யத்­தைத் தழு­வு­வது குற்­ற­மாக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டாது.

மத­மாற்ற சட்­டங்­க­ளைப் பயன்­

ப­டுத்தி சிறு­பான்மை இனத்­தோரை இந்து தேசி­ய­வாத அமைப்­பு­கள் மிரட்­டி அவர்களுக்குத் தொல்லை விளை­விக்க முடி­யும் என்று அமெ­ரிக்­கா­வின் அனைத்­து­லக சமய உரிமை ஆணை­யம் அக்­கறை தெரி­வித்­துள்­ளது. இது இந்தியாவில் சமூகப் பிளவை ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறியது.