நாட்டின் திறன்காட்டும் நீர்மூழ்கிக் கப்பல்

நாட்டின் திறன்காட்டும் நீர்மூழ்கிக் கப்பல்

2 mins read
5502b04f-c682-423e-a2bd-fdda77b7dff6
-

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­ப­டை­யின் இரண்­டாம், மூன்­றாம் நீர்­மூழ்­கிக் கப்­பல்­க­ளு­டைய செயல்­பாட்­டின் அதி­கா­ர­பூர்வ அறி­முக விழா ஜெர்­ம­னி­யின் கீல் துறை­முக நக­ரில் நேற்று இடம்­பெற்­றது. 'இம்­பெக்­க­பல்', 'இலஸ்­டி­ரி­யஸ்' என்ற பெயர்­க­ளைக் கொண்ட இவ்­விரு நீர்­மூழ்­கிக் கப்­பல்­க­ளின் செயல்­பாட்டை 'திஸ்­ஸன்­கி­ருப் மரீன் சிஸ்­டம்ஸ்' கப்­பல் பட்­ட­றை­யில் திரு­மதி லீ சியன் லூங் தொடங்­கி­வைத்­தார்.

"1960களில் தனது முதல் நீர்­மூழ்­கிக் கப்­ப­லான புதுப்­பிக்­கப்­பட்ட ஸ்வீ­டிஷ் கப்­ப­லுக்­குப் பிறகு, தற்­போது இந்­தக் கப்­பல்­களை சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­படை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது என்­றார் பிர­த­மர் லீ.

தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், ஜெர்­மா­னிய அதி­பர் ஒலாஃப் ஷோல்ஸ், ஜெர்­ம­னி­யின் கடற்­படை தலை­வர் வைஸ்-அட்­மி­ரல் ஜென் கிறிஸ்­டி­யன் கேக், சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­ப­டை­யின் தலை­வர் ரியர் அட்­மி­ரல் எரன் பெங், டிகெ­எம்­ஸின் தலைமை நிர்­வாக அதி­காரி ஒலி­வர் பர்க்­ஹார்ட், தற்­காப்பு, அறி­வி­யல், தொழில்­நுட்ப அமைப்­பின் தலைமை நிர்­வாகி மெர்­வின் டானு­டன், இரு நாடு­க­ளைச் சேர்ந்த மூத்த தற்­காப்பு அதி­கா­ரி­களும் இந்த நிகழ்­விற்கு வந்­தி­ருந்­த­னர்.

வெல்ல முடி­யாத வகை (இன்­வின்­சி­பல்) நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள் சிங்­கப்­பூ­ரின் ஆழ­மற்ற, பர­ப­ரப்­பான வெப்­ப­மண்­டல நீரில் செயல்­ப­டு­வ­தற்கு சிறப்­பான முறை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றால் நீண்ட நேரத்­திற்­கும் தூரத்­திற்­கும் செயல்­பட முடி­யும், அதிக பாரத்தை ஏந்­திச் செல்­ல­மு­டி­யும். சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பு­வ­தற்கு முன்­ன­தாக அவை கடல் சோத­னை­களில் ஈடு­ப­டுத்­தப்­படும்.

சிங்­கப்­பூ­ரும் ஜெர்­ம­னி­யும் ஒரே மாதி­ரி­யான சிந்­த­னை கொண்ட பங்­கா­ளித்­துவ நாடு­கள் என்று குறிப்­பிட்ட பிர­த­மர் லீ, இரு நாடு­களும் பல விஷ­யங்­களில் நல்ல புரிந்­து­ணர்வு கொண்­டுள்­ள­தா­கச் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஜெர்­ம­னிக்­கும் இடை­யி­லான பாது­காப்பு உற­வு­கள் சிறப்­பாக வளர்ந்து வரு­வ­தற்கு 2015இலும் 2018இலும் செய்­து­கொண்ட பாது­காப்பு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் முக்­கிய கார­ணங்­க­ளாக அமை­கின்­றன.

முதல் நீர்­மூழ்­கிக் கப்­பல் 'இன்­வின்­சி­பல்' 2019ஆம் ஆண்­டில் செயல்­பட ஆரம்­பித்­தது. நான்­கா­வது நீர்­மூழ்­கிக் கப்­பல் 'இனி­மிட்­ட­பல்' தற்­போது கட்­டப்­பட்டு வரு­கின்­றது.

முன்பு 'ஃபோர்மி­ட­பல்-கிளாஸ்' போர்க்­கப்­ப­லில் பணி­யாற்­றிய 2ஆம்­நிலை ராணுவ நிபு­ணர் நவின்­ராஜ் சந்­தி­ர­சே­க­ரன், 29, தற்­போது நீர்­மூழ்­கிக் கப்­ப­லில் பணி­யாற்­று­கி­றார். அவர் கட­லுக்கு அடி­யி­லுள்ள கடற்­படை கட்­ட­மைப்பை செயல்­ப­டுத்­தும் நிபு­ண­ராக செயல்­ப­டு­கி­றார்.

"போர்க்­கப்­ப­லில் பணி­யாற்­றிய காலத்­தில் என் கண்­களை, அதா­வது எனது 'ரேடாரை' பயன்­ப­டுத்­து­வேன். நீர்­மூழ்­கிக் கப்­ப­லில், என் செவி­களை, அதா­வது 'சொனாரை' பயன்­ப­டுத்­திச் செல்­கி­றேன்," என்­றார் நவின். 2011ல் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­ப­டை­யில் சேர்ந்த நவின், பட்­ட­யக் கல்­வியை மேற்­கொள்­வ­தற்கு முன்­னர் ஆர்­எஸ்­எஸ் ஃபோர்மி­ட­பல் கப்­ப­லில் பணி­யாற்­றி­னார். 2019ல் நீர்­மூழ்­கிக் கப்­ப­லில் செல்­வ­தற்­கான தகு­தி­யைப் பெற்று கடற்­படை கட்­ட­மைப்பை செயல்­ப­டுத்­தும் நிபு­ண­ரா­னார்.

செய்தி: மாதங்கி இளங்­கோ­வன்

mathangielan@sph.com.sg