படைவீரருக்கு பிரியாவிடை

படைவீரருக்கு பிரியாவிடை

2 mins read
5c862c71-89df-4015-aa4a-4078754ac8e0
-

மாதங்கி இளங்­கோ­வன்

தேசி­யக் கொடி போர்த்­தப்­பட்ட முதல்­நிலை சார்­ஜண்ட் எட்­வர்ட் எச். கோவின் நல்­லு­டல் தாங்­கிய சவப்­பெட்டி மண்­டாய் தக­னச்­சா­லை­யில் நேற்று பிற்­ப­கல் 1 மணி­ய­ள­வில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை வாக­னத்­தில் ஏற்­றப்­பட்ட தரு­ணம் மழை கொட்­டத் தொடங்­கி­யது.

மத்­திய தீய­ணைப்பு நிலை­யத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் ஹெண்­டர்­சன் சாலை­யில் கடந்த வியா­ழன் அன்று ஏற்­பட்ட தீச்­சம்­ப­வத்­தில் எட்­வர்­டு­டன் இணைந்து பணி­யாற்­றிய தீய­ணைப்பு வீரர்­களும் சவப்­பெட்­டி­யைச் சுமந்­த­னர். ரெட் ரைனோ என்­னும் இல­கு­ரக தீய­ணைப்பு வாக­னத்­து­டன் இணைக்­கப்­பட்ட இறுதி ஊர்­வல வண்­டிக்­குள் சவப்­பெட்டி ஏற்­றப்­பட்­டது. சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் இசைக்­குழு ஊர்­வ­லத்தை வழி­ந­டத்­தி­யது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் முத­லாம் படைப் பிரி­வைச் சேர்ந்த நூற்­றுக்­கும் மேற்­பட்ட அதி­கா­ரி­களும் இறு­திச் சடங்கு நடை­பெற்ற மண்­ட­பத்தை நோக்­கிய பாதை­யில் வரி­சை­யாக நின்­ற­னர்.

மறைந்த அதி­கா­ரிக்கு மரி­யாதை செலுத்­து­வ­தற்கு நேற்று காலை அனைத்து தீய­ணைப்பு நிலை­யங்­க­ளி­லும் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் தலை­மை­ய­கத்­தி­லும் ஐந்து பிரி­வு­க­ளின் தலை­மை­ய­கங்­க­ளி­லும் குடி­மைத் தற்­காப்பு பயி­ல­கத்­தி­லும் தீய­ழைப்பு மணி­கள் ஒலித்­தன.

மண்­டாய்க்­குச் செல்­வ­தற்கு முன் சின் மிங் டிரை­வில் உள்ள டிரி­னிட்டி காஸ்­கெட் வளா­கத்­தில் இறு­திச் சடங்கு நடை­பெற்­றது.

சார்­ஜண்ட் கோவைத் தாங்­கிய சவப்­பெட்­டி­யின் மேல் தேசி­யக் கொடி போர்த்­தப்­பட்­டது. பின்­னர் நல்லுடல் மண்­டாய் தக­னச்­சாலைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டு, குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் வாக­னத்­தில் ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

இறு­திச் சடங்­கில் சார்­ஜண்ட் கோவின் குடும்­பத்­தினர், நண்­பர்­களுடன் உள்­துறை துணை அமைச்­சர் முக­மது ஃபைஷால் இப்­ரா­ஹிம், 250 குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் ஆகியோரும் கலந்­து­கொண்­ட­னர்.

சார்­ஜண்ட் கோவின் பெற்­றோ ரிடம் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் ஆணை­யர் எரிக் யாப் தேசி­யக் கொடியை ஒப்படைத்தார்.

மறைந்த சார்­ஜண்ட் எட்­வர்ட் நாட்டிற்­கு ஆற்றிய சேவையை நினை­வு­கூ­ர்ந்து மரி­யாதை செலுத்­தும் விதமாக 'தி லாஸ்ட் போஸ்ட் புகல் கோல்' இசை ஒலிக்­கப்­பட்­டது. பின்­னர் அன்­னா­ரின் நல்­லு­டன் தக­னம் செய்­யப்­பட்­டது.

சிங்கப்பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் ஆணை­யர் எரிக் யாப், "சார்­ஜண்ட் கோ தம் சேவை­யில் ஆகப்­பெ­ரிய தியா­கத்­தைச் செய்­துள்­ளார். மிக உன்­னத உயிர்­க­ளைக் காப்­பாற்­றும் பணி­யில் ஈடு­பட்­டார். அவர் என்­றும் நம் நினை­வில் இருப்­பார்," என்­று கூறினார்.

எட்வர்ட்டுக்கு முதல்நிலை சார்ஜண்ட் பதவி - 2ஆம் பக்கம்