2023ல் பொருளியல் வளர்ச்சி 1.8% என நிபுணர்கள் கணிப்பு

2023ல் பொருளியல் வளர்ச்சி 1.8% என நிபுணர்கள் கணிப்பு

3 mins read

சிங்­கப்­பூ­ரின் அடுத்த ஆண்டு பொரு­ளி­யல் வளர்ச்சி முன்­னு­ரைப்பை தனி­யார் துறை பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் குறைத்து உள்­ள­னர். உல­கப் பொரு­ளி­யல் வளர்ச்சி மெது­வ­டை­யக்­கூ­டும் என்­பதை அதற்கு அவர்­கள் முக்­கிய கார­ண­மா­கக் குறிப்­பிட்டு உள்­ள­னர்.

2023ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 1.8 விழுக்­காடு என்ற அள­வி­லேயே வள­ரும் என்­பது நிபு­ணர்­க­ளின் ஆக அண்­மை­யக் கணிப்பு.

இந்த விகி­தம் இதற்கு முன்­னர் 2.8 விழுக்­காடு என குறிப்­பி­டப்­பட்டு இருந்­தது.

தனி­யார் துறை பொரு­ளி­யல் நிபு­ணர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட ஆக அண்மை ஆய்­வின் முடி­வு­களை சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று வெளி­யிட்­டது. வெளிப்­புற வளர்ச்சி குறை­யக்­கூ­டும் என்ற தக­வ­லால் இவர்­க­ளின் கணிப்பு மாறி­யுள்­ளது.

புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள் அதி­க­ரித்து வரும் வேளை­யில் சீனா­வின் கடு­மை­யான கொவிட்-19 முடக்­கக் கட்­டுப்­பா­டு­க­ளின் தாக்­கங்­களும் அத­னால் ஏற்­பட்ட சமூக அமை­தி­யின்­மை­யும் உலக வளர்ச்­சி­யைப் பாதிக்­கக்­கூ­டி­யவை என்ற ஆணை­யத்­தின் ஆய்­வ­றிக்­கைக் குறிப்­பி­டு­கிறது.

சீனா அதன் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­த தொடங்­கு­வதற்கு முன்­னர், அதா­வது நவம்­பர் 23ஆம் தேதி ஆய்­வ­றிக்­கை தயா­ரிக்­கத் தொடங்கப்பட்டு விட்டது.

எனவே, சீனா­வின் கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­

பா­டு­க­ளின் தாக்­கம் அதில் முக்­கி­ய­மா­கக் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

உலக நில­வ­ரம் மோச­ம­டைந்து வரு­வ­தை­யொட்­டி­யும் சிங்­கப்­பூர் வளர்ச்­சி­யின் முன்­னு­ரைப்பு குறைக்­கப்­பட்டு உள்­ளது. உக்­ரேன் போரின் விளை­வு­கள், அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் இறுக்­க­மான நாண­யக் கொள்கை ஆகி­ய­வற்­றால் பொரு­ளி­யல் மந்­த­நிலை தலை­யெ­டுக்­க­லாம் என முன்­னே­றிய பொரு­ளி­யல் நாடு­கள் பல எதிர்­பார்க்­கின்­றன.

இதற்கு முன்­னர் 2023ஆம் ஆண்­டுக்­கான சிங்­கப்­பூ­ரின் வளர்ச்சி 0.5 விழுக்­காட்­டிற்­கும் 2.5 விழுக்­காட்­டிற்­கும் இடைப்­பட்டு இருக்­கும் என்று வர்த்­தக, தொழில் அமைச்சு கடந்த மாதம் முன்­னு­ரைத்து இருந்­தது. இவ்­வாண்­டில் முன்­னு­ரைக்­கப்­பட்ட 3.5 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் இந்த விகி­தம் குறைவு.

அடுத்த ஆண்­டிற்­கான முன்­னு­ரைப்பு இவ்­வாண்­டின் முன்­னு­ரைப்­பைக் காட்­டி­லும் பாதி­ய­ளவே என்­றது ஆணை­யத்­தின் ஆய்­வ­றிக்கை.

இவ்­வாண்­டிற்­கான முன்­னு­ரைப்பு 3.6 விழுக்­காடு என்று சொல்­லப்­பட்ட நிலை­யில் அடுத்த ஆண்­டில் அது 1.8 விழுக்­கா­டா­கக் குறை­யும் என்­பது ஆய்­வா­ளர்­க­ளின் கணிப்பு.

அதே­போல, அடுத்த ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் மூலா­தா­ரப் பண­வீக்க விகி­தம் 4 விழுக்­கா­டாக இருக்­கும் என்­றும் அவர்­கள் தெரி­வித்து உள்­ள­னர். இந்த முன்­னு­ரைப்பு வரும் ஜன­வரி 1ஆம் தேதி முதல் 7 விழுக்­காட்­டி­லி­ருந்து 8 விழுக்­காட்­டுக்கு உய­ர­வி­ருக்­கும் ஜிஎஸ்­டியை ஒத்து இருக்­கும் என்று தனி­யார் துறை நிபு­ணர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

தங்­கு­மி­டச் செல­வு, தனி­யார் போக்­கு­வ­ரத்­துச் செல­வு­கள் போன்­ற­வற்­றைத் தவிர்த்த மூலா­தா­ரப் பண­வீக்­கம் இவ்­வாண்­டின் நான்­காம் காலாண்­டில் 5 விழுக்­காட்­டைத் தொடும் என்று கணிக்­கப்­பட்டுள்­ளது. அத்­து­டன், இவ்­வாண்டு முழு­மைக்­கு­மான மூலா­தா­ரப் பண­வீக்­கத்­திற்­கான சரா­சரி முன்­னு­ரைப்பு 3.8 விழுக்­காட்­டி­லி­ருந்து 4.1 விழுக்­காட்­டுக்­குத் திருத்­தப்­பட்டு இருந்­த­னது.

அதே­போல அனைத்­தை­யும் உள்­ள­டக்­கிய, ஆண்டு முழு­மைக்­கு­மான பண­வீக்க விகி­தம் இதற்கு முன்­னர் கணிக்­கப்­பட்ட 5.7 விழுக்­காட்­டி­லி­ருந்து 6.1 விழுக்­காட்­டுக்கு அதி­க­ரிக்­கப்­பட்­டது.

ஆய்­வில் 21 பொரு­ளி­யல் நிபு­ணர்­களும் பகுப்­பாய்­வா­ளர்­களும் பங்­கேற்­ற­னர். உல­கப் பொரு­ளி­யல் மந்­தமே 2023ஆம் ஆண்­டுக்­கான சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சி­யைக் கீழி­றக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்று ஆய்­வில் பங்­கேற்­றோ­ரில் 62.5 விழுக்­காட்­டி­னர் கூறி­யி­ருந்­த­னர்.

மேலும், இதுவே ஆக அதிக அக்­க­றைக்­கு­ரிய அம்­சம் என 31.3 விழுக்­காட்­டி­னர் குறிப்­பிட்­ட­னர்.

உலக நிலவரத்தால் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சி சுருங்கும் என முன்னுரைப்பு