புதுப்பிக்கப்பட்ட உருமாற்றத் திட்டம் உதயம்
இனி வரும் ஆண்டுகளில் மீள்
திறன்மிக்க, நீடித்து நிலைக்கவல்ல நிறுவனங்களை உருவாக்குவதே உணவு உற்பத்தித் துறையின் முக்கிய அம்சமாக இருக்கும்.
இத்துறைக்கான புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் நான்கு முக்கிய நோக்கங்களின் ஒன்று இது.
ரஷ்யா-உக்ரேன் போர் போன்ற உலக நிலவரங்கள் காரணமாகவும் கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாகவும் வர்த்தகச் செலவுகள் உயர்ந்துவரும் அதேவேளை விநியோகத் தொடரில் இடையூறுகள் தொடர்கின்றன. இவற்றை வர்த்தகங்கள் சமாளித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
'உணவு உற்பத்தித் துறை உருமாற்றத் திட்டம் 2025' என்னும் புதுப்பிக்கப்பட்ட திட்டம் நீடித்த நிலைத்தன்மை போன்ற வளரும் துறைகளில் வாய்ப்புப் பெற நிறுவனங்
களுக்கு உதவும். இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை மனிதவள அமைச்சரும் வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் நேற்று தொடங்கி வைத்தார்.
உணவு விநியோகத்திலும் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் நிகழ்வதால் எளிதில் பாதிப்படியும் தன்மை அதிகரித்து வருவதை சிங்கப்பூர் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கொள்ளைநோய், விநியோகத் தொடர் இடையூறுகள் மற்றும் எரிசக்தி நெருக்கடி போன்றவற்றால் இந்நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர், திட்டத்தின் தொடக்க நிகழ்வில் தெரிவித்தார்.
"பன்மய பொருள் தருவிப்பு, முக்கிய உணவுப் பொருள்களின் சேமிப்பு ஆகியவற்றின் நமது நிறுவனங்கள் தங்களது விநியோகத் தொடர் மீள்திறனை வலுப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்.
"அதேநேரம் அவை சிறந்த முறையில் ஒருங்கிணைந்து, உற்பத்தித் திறன்களை அதிகப்படுத்துவதை அந்நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
"நீடித்த நிலைத்தன்மை மீதான உலகக் கவனம் அதிகரித்து வரும் நிலையில், பசுமை உற்பத்தி நடைமுறைகளைப் பின்பற்ற நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக சங்கங்களுடனும் தொழிற்
சபைகளுடனும் நாம் இணைந்து பணியாற்றுவோம்," என்றார் டாக்டர் டான்.
உணவு தொடர்பான எட்டு வர்த்தகச் சங்கங்கள் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் உணவுக் கூட்டணி நீடித்து நிலைக்கக்கூடிய திட்டத்தை உருவாக்கும் என்றும் அதற்கு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முக்கிய நிறுவனங்களுடன் ஒன்றுசேர்ந்து 'எண்டர்பிரைஸ்எஸ்ஜி' அமைப்பு உருவாக்கி உள்ள புதுப்பிக்கப்பட்ட தொழில்துறை உருமாற்றத் திட்டம் சிங்கப்பூரை நம்பத்தகுந்த உணவு மையமாக உருவாக்கும் நோக்கம் கொண்டது.
இதற்கு முந்திய உருமாற்றத் திட்டம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதல் உணவு உற்பத்தித் துறை நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக எண்டர்பிரைஸ் எஸ்ஜி கூறியது.
2020ஆம் ஆண்டு 51,000 ஊழியர்களுடன் சிங்கப்பூரின் பொருளி யலில் இந்தத் துறை $4 பில்லியன் பங்களித்தது. இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு 40,000 ஊழியர்கள் இடம்பெற்று இருந்ததோடு பொருளியலுக்கு இதன் பங்களிப்பு $3.7 பில்லியனாக இருந்தது.

