மக்களுக்கே உதவி; பெருநிறுவனங்களுக்கான மின்கட்டண சலுகையைப் பறிக்க மலேசியா முடிவு

மக்களுக்கே உதவி; பெருநிறுவனங்களுக்கான மின்கட்டண சலுகையைப் பறிக்க மலேசியா முடிவு

2 mins read

குடி­யி­ருப்­பு­க­ளுக்­கான மின்­சா­ரக் கட்­ட­ணங்­களை உயர்த்­தப்­போ­வ­தில்லை என்று மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் தெரி­வித்து உள்­ளார். அதே­நே­ரம் பெரு­நி­று­

வ­னங்­கள் மற்­றும் பன்­னாட்டு நிறு­வ­னங்­

க­ளுக்கு அளிக்­கப்­பட்டு வரும் மின்­கட்­ட­ணச் சலு­கை படிப்­ப­டி­யா­கக் குறைக்­கப்­படும் என்­றும் அவர் நேற்று அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­திற்­குப் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

மேலும் அவர் தெரி­விக்­கை­யில், "தேவை­யுள்­ளோ­ருக்கு உத­வி­கள் போய்ச் ­சே­ரு­வ­தில் அர­சாங்­கம் கவ­னம் செலுத்­தும். பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஏற்­று­ம­தி­யில் ஈடு­படும் பெரு­நி­று­வ­னங்­க­ளுக்­கும் சலுகை வழங்­கப்­ப­டக்­கூ­டாது என அர­சாங்­கம் கருது­கிறது. இருப்­பி­னும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான உத­வி­கள் எது­வும் பாதிக்­கப்­ப­டாது. பொது­மக்­க­ளுக்கு சுமை ஏற்­றக்­கூ­டாது என்­னும் எங்­கள் முடி­வில் நாங்­கள் தெளி­வாக இருக்­கி­றோம். பெரு­நி­று­வ­னங்­க­ளுக்­கான கட்­டண உயர்வு படிப்­ப­டி­யா­க­வும் நியா­ய­மா­க­வும் வர்த்­த­கங்­க­ளுக்கு இடைஞ்­சல் ஏற்­ப­டாத வகை­யி­லும் மேற்­கொள்­ளப்­படும்.

"2023ல் மின்­கட்­ட­ணச் சலு­கை­யால் அர­சாங்­கத்­துக்கு 30 பில்­லி­யன் ரிங்­கிட் (S$9.2 பில்­லி­யன்) செல­வா­கும் என மதிப்­பி­டப்­பட்டுள்­ளது. விலை­வாசி உயர்வு குறைந்த வரு­மா­னக் குழு­வி­ன­ரைப் பாதிக்­காத வகை­யில் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டும் என்­பதே அர­சாங்­கத்­தின் தலை­யா­ய குறிக்­கோள்," என்று திரு அன்­வார் தெரி­வித்­தார். இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் பிர­த­மர் பொறுப்­பேற்ற நிலை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திரு அன்­வார், உயர்ந்­து­வ­ரும் வாழ்க்­கைச் செல­வி­னத்­தைச் சமா­ளிப்­பது தொடர்­பான வழி­மு­றை­களை வகுக்க சம்­பந்­தப்­பட்ட அமைச்சு­க­ளுக்கு இரு­வா­ரம் கெடு அளிக்­கப்­பட்டு இருப்­ப­தா­கச் சொன்­னார்.

அதே­நே­ரம் வச­தி­யா­ன­வர்­க­ளுக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் அளிக்­கப்­பட்டு வரும் சலு­கை­களை நிறுத்­து­வது தொடர்­பான ஆலோ­ச­னை­களை எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அப்­போது அவர் கூறியி­ருந்­தார்.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் பிலிப்­பீன்­சுக்கு அடுத்த நிதிப் பற்­றாக்­குறை உள்ள நாடாக மலே­சியா உள்­ளது. அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விலையை சந்தை விலைக்­குக் கீழ் வைத்­தி­ருப்­ப­தால் அதன் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் செல­வு­கள் மிகுந்து இருப்­ப­தைக் காண­மு­டி­கிறது.

இவ்­வாண்­டுக்­கான உத­வித் திட்­டங்­க­ளுக்கு மட்­டும் 80 பில்­லி­யன் ரிங்­கிட் செல­வா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதில் பாதித்­தொகை, எரி­பொ­ருள், சமை­யல் எரி­வாயு போன்­ற­வற்­றுக்­கான சலு­கை­க­ளுக்­கா­னது.

கொள்­ளை­நோய்க்­குப் பிறகு மலே­சி­யப் பொரு­ளி­யல் விரை­வில் மீண்­ட­போ­தி­லும், மக்­களில் பலர் அடிப்­படை உண­வைப் பெறு­ வ­தற்கே சிர­மப்­படும் நிலை இருப்­ப­தா­க­வும் பண­வீக்க உயர்­வும் இதற்கு ஒரு கார­ணம் என்­றும் புளூம்­பெர்க் செய்தி கூறுகிறது.