மரபணு ஆய்வில் 100,000 சிங்கப்பூரர்கள் பங்கேற்க அழைப்பு

மரபணு ஆய்வில் 100,000 சிங்கப்பூரர்கள் பங்கேற்க அழைப்பு

2 mins read

தேசிய அள­வில் நடத்­தப்­படும் மர­பணு ஆய்­வுக்கு 100,000 சிங்­கப் பூரர்­கள் தேவை. ஆசி­யா­வி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் நோய்­களை முன்­கூட்­டியே கணித்து அத­னைத் தடுக்­கும் வழி­களை ஆராய்­வ­தற்­காக இந்த ஆய்வு மேற்­கொள்­ளப் படு­கிறது. இதில் பங்­கேற்க வரு­மாறு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மர­பணு ஆய்வை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைக்­கும் நிகழ்­வில் பேசிய ஆய்வை வழி­ந­டத்­தும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழ­கத்­தின் லீ கோங் சியா மருத்­து­வப் பள்ளி பேரா­சி­ரி­யர் ஜான் சேம்­பர்ஸ் இந்த அழைப்பை விடுத்­துள்­ளார்.

நாற்­பது வய­துக்­குட்­பட்ட வேலை செய்­யும் நபர்­கள், குறிப்­பாக ஆண் களுக்கு நேர­மின்மை கார­ண­மாக ஆய்­வில் பங்­கேற்­பது சிர­மம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

பரி­சோ­த­னை­க­ளுக்கு குறைந்­தது ஐந்து மணி நேரம் தேவைப் ­ப­டு­வதே அதற்கு கார­ணம்.

'எஸ்ஜி100கே' (SG100K) எனும் ஆய்வு முடி­வு­றும்­போது சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய தர­வுத் தொகுப்­பு­களில் ஒன்­றாக அது இருக்­கும்.

அடுத்த முப்­பது ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே மர­ப­ணுவை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட நோய் ­க­ளைப்­பற்­றிய தக­வல்­களை அது கொண்­டி­ருக்­கும்.

கடந்த ஜன­வரி மாதம் ஆய்­வில் ஆட்­க­ளைச் சேர்க்­கும் பணி தொடங்­கி­யது. ஆனால் இது­வரை 20,000 பேர் மட்­டுமே பதிவு செய்­துள்­ள­னர் என்று பேரா­சி­ரி­யர் சேம்­பர்ஸ் கூறி­னார்.

ஆய்­வுக்­குத் தலை­மை­யேற்­றுள்ள துல்­லிய சுகா­தார ஆய்­வ­கத்­தின் தலைமை அறி­வி­யல் ஆய்­வா­ள­ரு­மான அவர், மேலும் 50,000 பேர் இதற்கு முன் ஆய்­வில் பங்­கேற்ற தொகுப்­பி­லி­ருந்து சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றார்.

லீ கோங் சியா மருத்­து­வப் பள்ளி, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்கழ­கத்­தின் சா சுவீ ஹோக் பொதுச் சுகா­தா­ரப் பள்ளி, சிங்­கப்­பூர் தேசிய கண் சிகிச்சை நிலை­யம், சிங்­கப்­பூர் இதய சிகிச்சை நிலை­யம் ஆகி­யவை பல்­வேறு ஆய்­வு­களை நடத்தி வரு­கின்­றன. இதி­லி­ருந்து 50,000 பேர் மர­பணு ஆய்­வுக்­குத் திரட்­டப்­பட்­டுள்­ள­னர்.

"இந்த ஆய்வு, ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் ஏதா­வது ஒரு வகை­யில் தொடர்பு இருக்­கும். சிங்­கப்­பூர் சமூ­கத்­தின் ஒவ்­வொரு பகு­தி­யை­யும் இதில் இணைப்­பது மிக­வும் முக்­கி­யம். ஏழையோ, பணக்­கா­ரரோ, இளை­யரோ, முதி­ய­வரோ, பெண்­களோ, ஆண்­களோ, அது மட்­டு­மல்­லா­மல் வெவ்­வேறு சமு­தாய, கலா­சா­ரப் பின்­ன­ணி­க­ளைக் கொண்ட அனை­வ­ரும் ஆய்­வில் உள்­ள­டக்­கப்­படுவர்," என்று அவர் கூறி­னார்.

"மனித ஆரோக்­கி­யம், நோய்­கள் தொடர்­பான பெரும்­பா­லான கல்வியறிவு மேற்­கத்­திய நாடு­க­ளி­லி­ருந்து வந்­தவை. ஆனால் ஆசிய மரபணு­வின் சிறப்பு அம்­சங்­கள், வாழ்க்கைப் பாணி, சுற்­றுச்சூழல் பிரச்­சி­னை­கள், அவர்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய நோய் போன்­றவை தெளி­வாக இல்லை," என என்­டி­யூ­வின் சுகா­தார, உயிர் அறி­வி­யல் பிரி­வின் மூத்த உதவி தலை­வர் பேரா­சி­ரி­யர் ஜோசப் சங் தெரி­வித் ­தார்.

நாற்­பது விழுக்­காடு இந்­திய, மலாய் பங்­கேற்­பா­ளர்­கள் இருப்­ப­தால் ஆசி­யா­வின் பரந்த அளவிலான முன்­னணி மர­பணு தர­வுத் தொகுப்­பாக இந்த ஆய்வு இருக்­கும் என எதிர்­பார்க்­கப்படு­கிறது.

அடுத்த இரண்டு ஆண்­டு­களில் மேலும் 30,000 பேரை சேர்க்க திட்ட மிடப்­பட்­டுள்­ளது என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தேசிய தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழ­கம் தெரி­வித்­தது.