இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றி

இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றி

1 mins read
57eefa8e-c949-4e2d-9f9c-f3a26e77f3b7
-

இந்­தியா, 5,000 கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள இடங்­க­ளை­யும் துல்­லி­ய­மா­கத் தாக்­கும் கண்­டம்­விட்டு கண்­டம் பாயும் ஏவு­க­ணையை வெற்­றி­க­ர­மாக சோதித்­துள்­ளது.

அக்னி-5 ஏவு­கணை அணு­வாயு­ தங்­களை ஏந்­திச் செல்­லும் வல்­ல­மை கொண்டவை.

சுமார் 5,000 கிலோ மீட்­டர் சுற்று வட்­டா­ரத்­தில் எந்த இடத்­தை­யும் அக்னி-5 ஏவு­க­ணை­யைக் கொண்டு தாக்க முடி­யும் என்­ப­தால் இந்­தி­யா­வின் தற்­காப்பு ஆற்­றல் மேலும் வலுப்­பெற்­றுள்­ளது.

ஐயா­யி­ரம் கிலோ மீட்டர் சுற்று வட்­டா­ரத்­தில் சீனா, பாகிஸ்­தான் உட்­பட சில ஐரோப்­பிய நாடு­களும் இடம்­பெற்று­உள்­ளன.

அண்மையில் தாவாங் எல்­லை­யில் சீனப் படை­யி­ன­ரு­டன் மோதல் ஏற்பட்டதால் பதற்­ற­மான சூழல் நிலவி வரும் நிலை­யில் இந்­தியா வியா­ழக்கிழமை இரவு அக்னி-5 ஏவு­கணையை சோதித்துப் பார்த்தது.

ஒடி­சா­வில் உள்ள அப்­துல் கலாம் தீவி­லி­ருந்து பாய்ந்து சென்ற ஏவு­கணை நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை துல்­லி­ய­மா­கத் தாக்­கி­யது என்று இந்­திய தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

அக்னி-1 முதல் அக்னி-4 வரை­யி­லான ஏவு­க­ணை­கள் 700 கிலோ மீட்­ட­ரி­லி­ருந்து 3,500 கிலோ மீட்­டர் வரை பாய்ந்து செல்­லக்­கூ­டி­யவை.

ஏற்­கெ­னவே இவை பரி­சோ­திக்­கப்­பட்டு ராணு­வத்­தில் சேர்க்­கப்­பட்­டுள்­ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.