மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் நிர்வாகம், முன்னைய அரசாங்கத்தின் நிதி முறைகேடுகளை மேலும் விரிவாக விசாரிக்க முடிவு செய்து உள்ளது.
அதன் ஒரு பகுதியாக பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவரான முகைதீன் யாசினின் 18 மாத பதவி காலத்தில் செய்யப்பட்ட அனைத்து அரசாங்க செலவுகளும் விசாரிக்கப்பட விருக்கின்றன.
இதற்கு முன்பு கொவிட்-19 நிதி தொடர்பான முறைகேடு குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இருந்தாலும் முகைதீன் யாசின், அப்போதைய நிதி அமைச்சர் சஃப்ருல் அஸிஸ், அப்போதைய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் ஆகியோர் யாரும் விசாரணைக்கு இதுவரை அழைக்கப்படவில்லை என்று ஊழல் ஒழிப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கூறினர்.
திரு முகைதீன், 2020 மார்ச் முதல் 2021 ஆகஸ்ட் வரையில் பிரதமராக இருந்தார்.
அதன் பிறகு அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்தது. தற்போதைய ஆளும் கூட்டணியில் அம்னோ இடம்பெற்றுள்ளது.

