செம்பவாங்கில் முப்பது ஆண்டுகள் இல்லாத புதிய வசதி

செம்பவாங்கில் முப்பது ஆண்டுகள் இல்லாத புதிய வசதி

2 mins read
07c1333c-e6e2-4de2-85c6-bb42a0b47190
-

கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மாக மூன்று ஆண்­டு­கள் தாம­தத்­திற்­குப் பிறகு செம்­ப­வாங்­கில் புக்­கிட் கேன்­பரா உண­வங்­காடி நிலை­யம் நேற்று குடியிருப் பாளர்கள் புடைசூழ ஆர­வா­ரத்­து­டன்

திறக்­கப்­பட்­டது.

செம்­ப­வாங்­கில் இத்­த­கைய வசதி ஒன்று அமை­வது 30 ஆண்டு களில் இதுவே முதல்­முறை.

சொங் பாங் கிரா­மத்­தின் ஒரு பகு­தி­யாக இருந்த இந்த இடத்­தில் செயல்­பட்ட ஈரச்­சந்­தை­யும் உண­வங்காடி நிலை­ய­மும் 1980களில் இடிக்­கப்­பட்­டன. தற்போது இந்த இடம் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது.

புக்­கிட் கேன்­பரா உண­வங்­காடி நிலை­யத்­தில் நேற்று பேசிய சுகா­தார அமைச்­ச­ரும் செம்­ப­வாங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரு மான ஓங் யி காங், இந்த உண­வங்காடி நிலையத்தில் ஆர்­வமுள்ள பல அம்­சங்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

"வாழ்க்­கைச் செலவு எப்­போ­தும் ஒரு பிரச்­சி­னை­யாக உள்­ளது. இந்த உண­வங்­காடி மூலம் குடி­யி­ருப் பாளர்­க­ளுக்கு உணவு விலை­யைக் குறைக்க முடி­யும்," என்­றார்.

புதிய உண­வங்­காடி நிலை­யத்­தில் ஏறக்­கு­றைய 800 இருக்கை வச­தி­க­ளு­டன் 44 கடை­கள் செயல் படு­கின்­றன. நான்கு ஹலால் உண­வுக் கடை­களும் நான்கு இந்­திய உண­வுக் கடை­களும் இங்கு உள்­ளன. வெவ்­வேறு ஆசிய உண­வு­களை விற்­கும் பல கடை­களும் இங்கு செயல்­ப­டு­கின்­றன.

சுமார் பத்து விழுக்­காடு கடை­களை செம்­ப­வாங் குடி­யி­ருப்­பா­ளர்­கள் நடத்­து­வது இதன் சிறப்பு அம் சங்களில் ஒன்று.

நேற்று காலை உண­வங்­காடி நிலை­யம் திறக்­கப்­பட்­ட­தும் பெரும்­பா­லான மேசை­கள் நிரம்­பி­விட்­டன. சில கடை­களில் நீண்ட வரி­சை காணப்­பட்­டது.

நீண்டகாலத்திற்குப் பிறகு வந்துள்ள உணவங்காடி நிலையத் தால் செம்பவாங் வட்டாரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

"என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தொலைவில் உள்ள இங்கு வகை, வகையான உணவு விற்கப் படுகின்றன," என்று 27 வயது மென்பொருள் பொறியாளர் ஜோஷுவா படுலா தெரிவித்தார்.

"நீண்டகாலமாக இதற்காகக் காத்திருந்தேன். குடியிருப்பாளர் களும் எப்போது திறப்பார்கள் என்று காத்துக்கிடந்தனர்," என்றார் அவர்.

பல்நோக்கு மண்டபம், நீச்சல் வளாகம், பலதுறை மருந்தகம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங் கிணைக்கப்பட்ட புக்கிட் கேன்பரா விளையாட்டு மற்றும் சமூக மையத்தின் ஒரு பகுதியாக புதிய உணவங்காடி நிலையம் இடம் பெற்றுள்ளது.

நீச்சல் வளாகமும் உடற்பயிற்சிக் கூடமும் அடுத்த ஆண்டு முதற் பாதியில் தயாராகிவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

பல்நோக்கு மண்டபம் ஏற்கெனவே திறக்கப்பட்டு உள்ளது. இதர வசதிகளும் படிப்படியாகத் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.