ஜென்டிங் ஹைலண்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் ஒன்பது பேர் கதி தெரியவில்லை
ஜென்டிங் ஹைலண்ட் அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நேற்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்தது. மேலும் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு இயக்குநர் நோராசம் காமிஸ் நேற்று மதியம் தெரிவித்தார்.
இன்னமும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றார் அவர் நேற்றிரவு.
வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.42 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தலைநகர் ேகாலாலம்பூர் புறநகர்ப்பகுதியில் பத்தாங் காலியில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் பண்ைணயில் அைமக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பல முகாம்கள் புதையுண்டன.
மொத்தம் 94 பேர் விபத்தில் சிக்கினர். அவர்களில் 61 பேர் உயிரோடு மீட்கப்பட்டு உள்ள நிலையில் பத்து பேரைக் காணவில்லை.
நேற்று ஒரு பெண், ஒரு சிறுமி, ஒரு சிறுவனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களுடன் சேர்த்து 24 பேர் மாண்டனர்.
"இரண்டு நாள் ஆகிவிட்டது. இன்னமும் புதையுண்டவர்களைத் தேடி வருகிறோம். மண்ணுக்கு அடியில் பிராணவாயு கிடைக்காது. காணாமல் போனவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
"பெரும்பாலான உடல்கள் ஐந்து முதல் பத்து அடி ஆழத்தில் புதைந்திருந்தன. கை, கால்கள தென்பட்டதைத் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டன," என்று திரு நோராசம் காமிஸ் தெரிவித்தார்.
சுமார் 15 அமைப்புகளைச் சேர்ந்த 394 ேபர் மீட்டுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு நேற்றுக் காலை 8.30 மணியளவில் மீண்டும் தொடங் கியது.
"உச்சியிலிருந்து தண்ணீர் வழிந்துகொண்டிருந்ததால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருந்தது," என்று திரு நோராசம் காமிஸ் கூறினார்.
வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர் களிடம் பேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், விபத்தில் இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்க உத்தர விட்டுள்ளதாகத் தெரிவித்தார். விபத்தில் சிக்கியவர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய மூன்று சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி உதவி வழங்கப்படு வதை உறுதி செய்ய மலேசிய அரசாங்கம் விரைந்து செயல்பட்டு வருவதாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு கூறியது.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, விபத்தில் சிக்கியவர்களுடன் தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறது.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் பேரிடர் குறித்து தங்களுடைய அனுதாபக் கடிதங்களை மலேசிய தலைவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மலேசியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும் காயம் அடைந்தவர்கள் குறித்தும் தாம் மிகவும் வருந்துவதாக பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர் களுக்கு மலேசிய அரசாங்கம் உதவியதற்கு நன்றி தெரிவித்த திரு லீ, தேவை ஏற்ட்டால் தேடி, மீட்புப் பணியில் உதவ சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மலேசிய அரசாங்கத்தின் ஆரம்பக்கட்ட விசாரணையில் 450,000 கன மீட்டர் நிலப் பகுதி சரிந்தது தெரியவந்துள்ளது.
சுமார் 30 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த நிலப் பகுதி 0.4 ஹெக்டர் பரப்பளவு நிலத்தை மூடிவிட்டது. ஃபாதர்ஸ் ஆர்கானிக் பண்ைணயில் அமைக்கப்பட்ட முகாம்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

