சீனாவில் தொற்றுநோய்க்கு ஒரு மில்லியன் பேர் இறக்கக்கூடும்

சீனாவில் தொற்றுநோய்க்கு ஒரு மில்லியன் பேர் இறக்கக்கூடும்

1 mins read

மக்­கள் எதிர்ப்பு கார­ண­மாக கொவிட்-19 கொள்­ளை­நோய் கட்­டுப்­பா­டு­களை சீன அர­சாங்­கம் அதி­ர­டி­யாக தளர்த்­தி­யுள்­ளது.

ஆனால் இது எதிர்­ம­றை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் முன்­னெச் சரிக்­கை­யின்றி தளர்த்­தப்­பட்­டால் கட்­ட­விழ்த்து விட்­ட­து­போல தொற்­று­நோய் அதி­வே­கத்­தில் பர­வக்­கூ­டும் என்­றும் 2023ல் அந்­நாட்­டில் ஒரு மில்­லி­யன் பேர் அதற்கு உயி­ரி­ழிக்­க­லாம் என்­றும் அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்டு இயங்­கும் 'ஐஎச்­எம்இ' எனும் சுகா­தார அள­வீடு, மதிப்­பீடு கழ­கம் முன்­னு­ரைத்­துள்­ளது.

"ஏப்­ரல் 1ஆம் தேதி உச்ச கால­கட்­டத்­தில் 322,000 பேர் தொற்­று­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­வர். நாட்­டின் மூன்­றில் ஒரு பங்கு மக்­க­ளுக்கு தொற்­று­நோய் ஏற்­பட்­டு­வி­டும்," என்று அதன் இயக்­கு­நர் கிறிஸ்­டஃபர் முர்ரே எச்­ச­ரித்­துள்­ளார்.

இதற்­கி­டையே தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் கொவிட்-19 மரண அலை தலை­தூக்கி உள்­ளது. "நாங்­கள் 150 உடல்­களை புதன்­கி­ழமை தக­னம் செய்­தோம். இது, கடந்த குளிர்­கா­லத்­தை­விட அதி­கம்," என்று பெய்­ஜிங்­கில் அர­சுக்­குச் சொந்­த­மான டோங்­ஜி­யாவ் இறு­திச் சடங்கு ஏற்­பாட்டு நிறு­வ­னத்­தின் ஊழி­யர் ஒரு­வர் தன் பெயர் குறிப்­பி­டா­மல் தெரி­வித்­தார்.

இம்­மா­தம் 4ஆம் தேதி­யி­லி­ருந்து கொவிட்-19 மரண எண்­ணிக்கை விவ­ரங்­களை சீன அதி­கா­ரி­கள் வெளி­யி­டு­வி­தில்லை.