பயணிகள் எண்ணிக்கை இலக்கை நெருங்கும் சாங்கி விமான நிலையம்

பயணிகள் எண்ணிக்கை இலக்கை நெருங்கும் சாங்கி விமான நிலையம்

1 mins read
c1d047e6-bafa-4ef5-83f4-60278e11209a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்ததில் சராசரியாக 75 விழுக்காடு உள்ளது.

நிலையத்தின் வழியாக அன்றாடம் கிட்டத்தட்ட 150,000 பயணிகள் செல்கின்றனர். ஒரு வாரத்தில் சுமார் ஒரு மில்லியன் பயணிகள் நிலையத்துக்கு வருகையளிக்கின்றனர் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்காக சிங்கப்பூர் அதன் எல்லைகளை ஏப்ரல் மாதம் மீண்டும் திறந்தது. அந்தக் காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது சாங்கி விமான நிலையத்துக்கு வருகையளிக்கும் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம்.

இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் 23.6 மில்லியன் பயணிகளை கையாண்டதாக நிலையம் குறிப்பிட்டது.