வெளிநாட்டு ஊழியர்கள் 6,500 பேர் திரண்ட கொண்டாட்டம்

அனுஷா செல்­வ­மணி

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், சொந்த நாட்­டில் இருப்­ப­தைப் போன்ற உணர்­வு­டன் திக­ழ­வும் அவர்­க­ளின் நல்­வாழ்வை மேம்­படுத்­த­வும் அர­சாங்­கம் முயற்­சி­களைத் தொட­ரும் என்று மனி­த­வள துணை அமைச்­சர் டாக்­டர் கோ போ கூன் தெரி­வித்­தார்.

அனைத்­து­லக புலம்­பெயர்ந்­தோர் தினத்தை முன்­னிட்டு லிட்­டில் இந்­தி­யா­வின் பர்ச் ரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்ட அமைச்­சர், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குப் பாது­காப்­பான, வச­தி­யான வாழ்­விடச் சூழலை அமைப்­ப­தற்­கான முயற்­சி­கள் தொட­ரும் என்று குறிப்­பிட்­டார்.

அதோடு, அத்­த­கைய ஊழி­யர்­க­ளின் தங்­கு­மிட வாழ்க்கை தலை­சி­றந்த நடை­மு­றை­கள், தரங்­க­ளு­டன் தொடர்ந்து மேம்­படும். பல­த­ரப்­பட்ட சூழ்­நி­லை­களைச் சமா­ளிக்­கும் வகை­யில் அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்­சி­யும் அளிக்­கப்­படும்.

ஒருங்­கி­ணைந்த தொடக்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை­யும் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட்டு சீர­மைக்­கப்­படும். இவற்­றோடு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான சமூ­கப் பொழுது­போக்கு வச­தி­களும் நட­வ­டிக்­கை­களும் மேம்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார். இவற்றை எல்­லாம் சாதிக்க ஒவ்­வொ­ரு­வ­ரும் சேர்ந்து செயல்­பட வேண்­டும் என்றார் அமைச்­சர்.

அனைத்­து­லக புலம்பெ­யர்ந்­தோர் தினத்­தைக் கொண்­டா­டும் வகை யில் மனி­த­வள அமைச்­சின் ஏசிஇ குழு­மம், 120க்கும் மேற்­பட்ட பங்காளி அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து இம்­மா­தம் 10ஆம் தேதி முதல் நேற்று­வரை ‘கைகோர்ப்­போம், பிணைப்பை வலுப்­ப­டுத்­து­வோம்’ என்ற கருப்­பொ­ரு­ளு­டன் பல்­வேறு நிகழ்ச்­சி­களை நடத்­தியது.

அவற்றில் 50,000 ஊழி­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

அந்த நிகழ்ச்­சி­க­ளுக்கு முத்­தாய்ப்­பாக லிட்­டில் இந்­தி­யா­வில் நேற்று நடந்த நிகழ்ச்­சி­யில் 6,500 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­டன் உள்­ளூர் மக்­களும் கலந்­து­கொண்ட அந்த நிகழ்ச்­சி­யில், தங்­கள் சகாக்­கள் தங்­கள் மொழி­யில் அரங்­கேற்றிய கலா­சார நிகழ்ச்­சி­களை ஊழி­யர்­கள் கண்டு மகிழ்ந்­த­னர். தங்­கள் நாடு­க­ளைச் சேர்ந்த உணவு வகை­களை உண்டு மகிழ்ந்­த­னர்.

இத­னி­டையே, இங்கு கடந்த 20 ஆண்­டு­க­ளாக கட்­டு­மா­னத் தொழி­லில் வேலை பார்க்­கும் தமிழ்­நாட்­டின் காரைக்­கு­டி­யைச் சேர்ந்த ராமைய்­யா தேவர் மாத­வன், 50, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­நி­கழ்ச்சி தனக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!