அர்ஜென்டினா காற்பந்து அணி மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதியாட்டம் கூடுதல் நேரத்திற்குப் பிறகு 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
அதைத் தொடர்ந்து நடந்த பெனால்டிகளில் 4-2 எனும் கணக்கில் அர்ஜென்டினா வாகை சூடியது.
இந்த ஆட்டத்தில் பிரான்சின் கிலியோன் எம்பாப்பே 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். அர்ஜென்டின நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி இரு கோல்களைப் போட்டார்.
உலகக் கிண்ணத்தை அர்ஜென்டினா வெல்வது என்பது விதி என்று அந்த அணியின் கோல்காப்பாளர் எமிலியானோ மார்டினேஸ் கூறினார்.
ஆட்டம் முடிவடைந்த பிறகு தம்மால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி சொன்னார்.

