மனமாறிய மெஸ்ஸி, ஆட்டம் இன்னும் தொடரும் என்கிறார்

மனமாறிய மெஸ்ஸி, ஆட்டம் இன்னும் தொடரும் என்கிறார்

1 mins read
0694d29d-028b-483f-a59e-37ca278157fb
-

அர்­ஜென்­டி­னா­வின் கதா­நாய கனான லயனல் மெஸ்ஸி, 35, இரு கோல்­க­ளைப் புகுத்தி, உல­கக் கிண்­ணத்­தைக் கையில் பிடித்­த­தும் அந்த பெரு­மை­யான நிமி­டத்தில் தன்னை மறந்து மனதை மாற்­றிக்கொண்­டார்.

ஃபிஃபா உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குப் பிறகு ஓய்வு பெறு­வேன் என்ற அவர், தனது ஆட்­டம் இன்னும் தொட­ரும் என்று கூறி­யுள்­ளார்.

பிரான்­சுக்கு எதி­ரான இறு­திப்­போட்டி, அவ­ரது வாழ்க்­கை­யில் இது­வரை இல்­லாத மிகச்­சி­றந்த விளை­யாட்­டாக அமைந்­தது. அந்த சிறப்­பான இர­வுக்­குப் பிறகு அர்­ஜென்­டி­னா­வுக்­குத் தொடர்ந்து விளை­யாட அவர் முடிவு செய்­துள்­ளார்.

"இது, நம்ப முடி­யா­தது. உல­கக் கிண்­ணத்­தைக் கட­வுள் எனக்­குக் கொடுப்­பார் என்­பது எனக்­குத் தெரி­யும். இதில் நான் உறு­தி­யாக இருந்­தேன். இந்­தக்­க­னவு நீண்­ட­கா­ல­மாக இருந்தது.

"இத­னு­டன் ஓய்வு பெற­வும் விரும்­பி­னேன். ஆனால் தேசிய அணி­யி­லி­ருந்து வில­கப்போவ­தில்லை. உல­கக் கிண்­ணத்­தின் வெற்றியாளராக அர்­ஜென்­டினா சட்­டையை அணிந்து தொடர்ந்து விளை­யாட விரும்­பு­கி­றேன்," என்று மெஸ்ஸி கூறி­னார்.

அர்­ஜென்­டி­னா­வின் பயிற்­று­விப் ­பா­ள­ரான லய­னல் ஸ்க­லோ­னி­யும் மெஸ்ஸி, மேலும் ஓர் உல­கக் கிண்­ணப் போட்­டிக்கு விளை­யா­ட­லாம் என பரிந்­து­ரைத்­துள்­ளார்.

"மெஸ்ஸி விளை­யாட விரும்­பி­னால் அவர் எங்­க­ளு­டன் இருப்­பார். இப்­போது தனது வாழ்க்­கை­யில் என்ன செய்ய வேண்­டும் என்­பதை அவர்­தான் முடிவு செய்ய வேண்­டும். அவ­ருக்­கும் அவ­ரது அணிக்­கும் பயிற்­சி­ய­ளிப்­பது எனக்கு மிக­வும் மகிழ்ச்சி," என்று ஸ்கலோனி தெரி­வித்­தார்.