மலேசிய பிரதமர் அன்வாருக்கு 3ல் 2 பங்கு ஆதரவு

மலேசிய பிரதமர் அன்வாருக்கு 3ல் 2 பங்கு ஆதரவு

2 mins read
48d0b79e-4a97-4740-82dc-adeeb7b2385b
-

மலே­சி­யா­வில் பொதுத் தேர்­தல் முடிந்து பிரதமர் அன்­வார் இப்­ரா­கிம் தலை­மை­யி­ல் அமைக்கப்பட்ட ஒரு­மைப்­பாட்டு அர­சாங்­கத்­துக்கு நேற்று நாடா­ளு­மன்­ற நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் மூன்­றில் இரண்டு பங்கு உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு தெரி­வித்­தனர்.

2008ஆம் ஆண்­டுக்­குப் பிறகு வலு­வான ஆத­ர­வு­ பெற்ற பிரதமராக அன்­வார் தமது பொறுப்பை தக்­க­வைத்­துக் கொண்­டுள்­ளார்.

அன்வார், 75, மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்வார் பிரதமர் ஆன பிறகு 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் நேற்று முதல் முறை யாகக் கூடியது.

நம்பிக்கை வாக் கெடுப்புத் தீர்மானத்தை துணைப் பிரதமர் ஃபடிலா யூசோப் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி ஆகிய இரு தரப்பில் தலா 12 உறுப்பினர்கள் பேசினர்.

புதிதாக நியமிக்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவரான 74 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெரிக் கத்தான் நேஷனலின் ஹம்ஸா ஸைனுதீன், நம்பிக்கைத் தீர்மானம் 'ஒரு வித்தை' என்று குறிப்பிட்டார்.

அன்வார் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தங்களுக்குள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன் பிறகு கண்துடைப்புக்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்து கின்றனர் என்று அவர் கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற இந்த உடன்பாட்டின்கீழ் அனைத்து கட்சிகளும் எந்தவொரு நம்பிக்கைத் தீர்மானம் அல்லது செலவு மசோதாவில் அன்வாரை ஆதரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

அவ்வாறு செய்யத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் புதிய கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர்.

"உங்களுக்குத்தான் வாக்கு அளிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் ஒப்பந்தம் நியாயமானது அல்ல. மக்கள் உண்மையிலேயே ஆதரிக்கிறார்களா அல்லது ஒப் பந்தத்தால் ஆதரிக்கிறார்களா என்பது தெரியாமல் போகும்," என்று திரு ஹம்சா தெரிவித்தார்.

முன்னதாக நாடாளுமன்றம் கூடியதும் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.

மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் அன் வாரின் கெஅடிலான் கட்சியின் முன்னைய கொறடாவாகவும் இருந்த ஜொஹாரி அப்துல், புதிய சபாநாய கராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு ஆதரவாக 147 வாக்குகள் கிடைத்தன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு இது ஒரு வாக்குக் குறைவாகும்.

சபாநாயர் பதவிக்கு பெரிக்காத் தான் நேஷனல் நிறுத்திய ரட்ஸி ஷேக் அகமதுக்கு 74 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அண்மைய பத்தாங் காலி விபத்தில் இறந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது.