அன்வாரின் சிறிய வரவுசெலவுத் திட்டம்

அன்வாரின் சிறிய வரவுசெலவுத் திட்டம்

2 mins read

மலே­சிய நாடா­ளு­மன்­றம், அடுத்த ஆறு மாத அர­சாங்க செல­வி­னங்­களுக்­கான மலே­சிய ரிங்­கிட் 107 பில்­லி­யன் (32 பில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி) மதிப்­புள்ள தற்­கா­லிக மத்­திய துணை வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நேற்று அறி­வித்­துள்­ளது.

இந்த துணை மசோதா நாடாளு­மன்­றத்­தில் விவா­த­மின்றி வாய்­மொழி வாக்­கு­கள் மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. அடுத்த ஆண்­டுக்­கான மத்­திய அரசின் வரவுசெல­வுத் திட்­டம் இல்­லா­மல் இருப்­ப­தால் அரசாங்­கம் முடங்­கு­வ­தைத் தவிர்க்க இருப்­பி­லி­ருந்து நிதி எடுக்க இத்­திட்­டம் வழி­வ­குக்­கும்.

அரசு ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம், உப­கா­ரச் சம்­ப­ளம், சமூக நலத் தொகை போன்றவற்றை வழங்­க­வும் மருத்­துவ, கல்­வித் துறை­கள் தங்களுக்­கான நிதி ஒதுக்­கீட்­டைப் பெற­வும் இந்தத் தற்­கா­லிக சிறிய வரவு செல­வுத் திட்­டம் அனுமதிக்கும்.

நிலு­வை­யில் உள்ள உள்­கட்­ட­மைப்புத் திட்­டங்­க­ளைத் தொட­ர­வும் அர­சாங்­கத்­தின் அவ­ச­ரச் செல­வுக்­கான தொகை கையி­ருப்­பில் இருக்­க­வும் இந்த வரவுசெல­வுத் திட்­டத்தை உட­ன­டி­யாக அங்­கீ­க­ரிப்­பது முக்­கி­யம் என்று மலே­சி­யா­வின் பிர­த­ம­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான அன்­வார் இப்­ரா­கிம் கூறி­னார். 2023ஆம் ஆண்­டுக்­கான முழு­மை­யான வரவு செல­வுத் திட்­டம் ஆண்­டின் தொடக்­கத்­தில் தாக்­கல் செய்­யப்­படும் என்­றும் அவர் சொன்னா்.

இத்திட்­டத்­தின் கீழ் நிலு­வை­யில் உள்ள மேம்­பாட்­டுக்­கான அவ­சர செல­வி­னங்­க­ளுக்­காக நாட்­டின் மேம்­பாட்டு நிதி­யி­லி­ருந்து 56 பில்­லி­யன் ரிங்கிட் தொகையை எடுக்க நாடாளு­மன்­றம் ஒப்­பு­தல் அளித்­தது.

முன்­ன­தாக தேசிய முன்­னணி அர­சாங்­கம் அக்­டோ­பர் 2023க்காக தாக்­கல் செய்­தி­ருந்த 372 பில்­லி­யன் ரிங்­கிட் வர­வு­செ­ல­வுத் திட்­டம், நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­தால் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

முகை­தீன் மீது அன்­வார் வழக்கு

அன்­வார், சிலாங்­கூ­ருக்­கான பொரு­ளி­யல் ஆலோ­ச­க­ராக இருந்­த­போது அவ­ருக்கு 15 மில்­லி­யன் ரிங்­கிட் (S$4.6 மி.) வழங்­கப்­பட்­ட­தாக கூறி­ய­தற்­காக முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீது திரு அன்­வார் வழக்­குத் தொடுத்­துள்­ளார்.

முகை­தீனை நீதி­மன்ற விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யா­கு­மாறு எஸ்­என் நாயர் அண்ட் பாட்­னர்ஸ் சட்ட நிறு­வ­னம் உயர் நீதி­மன்ற பதி­வ­கத்­தில் நேற்று மனு தாக்­கல் செய்­தது.

பெரிக்கத்தான் நேஷ­னல் வேட்­பா­ளர் அஸ்­மான் நஸ்­ரு­தீனை ஆத­ரித்து டிசம்­பர் 5ஆம் தேதி கெடா­வில் நடந்த தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது முகை­தீன் அவ்­வாறு கூறி­யதாக அன்­வார் சொன்­னார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்திட மிருந்து மில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறும் முகைதீனின் தவறான சொற்கள், தாம் நம்பகத் தன்மை யற்றவர், உண்மைக்குப் புறம்பானவர் என தம்மைக் காட்சிப்படுத்துவதாக உள்ளன என்றார் அன்வார்.