கரைபுரண்ட உற்சாகம்

கரைபுரண்ட உற்சாகம்

1 mins read
3e3f7c79-0274-4004-b6ba-1e37bee5ef8a
-

உலகக் கிண்ணத்தை வென்று வந்த வீரர்களை வரவேற்று நாடே கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது. லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அமர்ந்திருந்த விமானம் நேற்று முன்தினம் இரவு தலைநகர் பியூனஸ் அய்ரஸில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதுமே மக்கள் ஆரவாரக் கூச்சலிட்டு கொண்டாடத் தொடங்கினர்.

விமான நிலையத்திலிருந்து திறந்த பேருந்தில் அவர்கள் வீதி வலம் வந்தனர். நீல - வெள்ளை உடையில் சாலைகள் எங்கும் திரண்ட மக்களால் அலை பொங்கியதுபோல காட்சியளித்தது.

பல்லாயிரக் கணக்கில் கூடிய ரசிகர்கள் தேசியக் கொடியை அசைத்தும் வாத்தியங்களை இசைத்தும் ஆடிப் பாடி வீரர்களை வரவேற்றனர். வெற்றியைக் கொண்டாட நேற்று அங்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு அன்று நடந்த ஃபிஃபா 2022 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற பெனால்டி கோல் எண்ணிக்கையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. 36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது. இந்த அணிக்கு இது மூன்றாவது வெற்றி.

படம்: ஏஎஃப்பி

மேலும் செய்தி பக்கம் 7இல்