கொவிட்-19 அவசரநிலை: இப்போதைக்கு முடிவில்லை

கொவிட்-19 அவசரநிலை: இப்போதைக்கு முடிவில்லை

3 mins read

சீனாவில் தொற்று அதிகரித்து வருவதையடுத்து உலக சுகாதார நிறுவனம் கருத்து

மோச­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய புதிய அலை சீனா­வில் உரு­வா­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வது, கொவிட்-19 பெருந்­தொற்று தொடர்­பான உல­க­ளா­விய அவ­ச­ர­நி­லையை முடி­விற்­குக் கொண்­டு­வ­ரு­வ­தைக் கேள்­விக்­குறி­யாக்­கி­யுள்­ளது.

இப்­போ­தைக்கு அத்­த­கைய அறி­விப்பை வெளி­யி­டு­வது சரி­யான முடி­வாக இராது என்று முன்­னணி அறி­வி­யல் வல்­லு­நர்­கள் பல­ரும் உலக சுகா­தார நிறு­வன ஆலோ­ச­கர்­களும் தெரி­வித்து இருப்­ப­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களுக்கு எதி­ரா­கப் பொது­மக்­கள் திடீர் போராட்­டங்­களில் ஈடு­பட்டதை அடுத்து, கொவிட்-19 தொற்றை அறவே ஒழிப்­பது என்ற கொள்­கை­யைச் சீனா தளர்த்­தி­விட்­டது.

இந்­தத் திடீர் நிலைப்பாட்டு மாற்­றம் கார­ண­மாக அங்கு மீண்­டும் கொவிட்-19 பர­வல் அதி­க­ரித்­துள்­ளது.

அங்கு தடுப்­பூசி போடும் விகி­த­மும் குறை­வாக இருப்­ப­தால் அங்கு 2.1 மில்­லி­யன் பேர்­வரை இறக்­கும் அபா­யம் இருப்­ப­தாக 'ஏர்­ஃபி­னிட்டி' எனும் உலக சுகா­தா­ரப் புல­னாய்வு, பகுப்­பாய்வு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

"சீன மக்­கள் குறைந்த நோய் எதிர்ப்­பாற்­ற­லைக் கொண்­டுள்­ள­னர். உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்­கப்­பட்ட சினோ­வேக், சினோ­ஃபார்ம் தடுப்­பூ­சி­களை அவர்­கள் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அவற்­றின் செயல்­தி­றன் குறிப்­பி­டத்­தக்க அளவு குறைவு என்­பதை ஆய்வு முடி­வு­கள் காட்­டு­கின்­றன," என்று ஏர்­ஃபி­னிட்டி நிறு­வ­னம் கூறி இருக்­கிறது.

இதன் கார­ண­மாக, ஹாங்­காங்­கில் கடந்த பிப்­ர­வரி மாதம் ஏற்­பட்­டது போன்ற தொற்று அலை சீனா­வி­லும் உருவாகலாம் என்­றும் அத­னால் 167 மில்­லி­யன் முதல் 279 மில்­லி­யன் பேர்­வரை கொரோனா தொற்­றுக்கு ஆளா­க­லாம் என்­றும் அந்­நி­று­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

உல­கில் அதிக மக்­கள்­தொகை­யைக் கொண்­டுள்ள சீனா­வில் முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­கம். அத­னால், கொவிட்-19 தொற்றை அறவே ஒழிப்­பது என்ற தனது கொள்­கை­யைத் தளர்த்­து­முன், சீனா தடுப்­பூசி போடும் விகி­தத்தை முடுக்­கி­வி­டு­வது அவ­சி­யம் என்று ஏர்­ஃபி­னிட்டி நிறு­வ­னத்­தின் தடுப்­பூ­சி­கள் மற்­றும் நோய்த்­தொற்­றி­யல் பிரி­வின் தலை­வர் டாக்­டர் லூயி பிளேர் அறி­வுறுத்தி இருக்­கி­றார்.

முன்­ன­தாக, தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று கொரோ­னா­வால் இரு­வர் உயி­ரி­ழந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கொவிட்-19 பர­வத் தொடங்­கி­ய­தில் இருந்து இப்­போது­தான் அந்­ந­க­ரில் மோச­மான தொற்று அலை வீசி­வ­ரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 7ஆம் தேதி கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­பின் கொரோனா மர­ணம் பதி­வா­கி இ­ருப்­பது இதுவே முதன்­முறை என்று சிஎன்­என் செய்தி நிறு­வனம் குறிப்­பிட்­டுள்­ளது.

கொவிட்-19 தொற்றியோர் வேலைக்குத் திரும்பலாம்

இந்­நி­லை­யில், இலே­சான தொற்று அறி­கு­றி­கள் இருப்­போர் வேலைக்­குத் திரும்­ப­லாம் என்று சில சீன நக­ரங்­கள் அறி­வித்­துள்­ளன. தொற்று அறி­கு­றி­கள் ஏது­மின்றி அல்­லது லே­சான அறி­கு­றி­க­ளு­டன் பாதிக்­கப்­பட்­டுள்ள அர­சாங்க ஊழி­யர்­கள் தொடர்ந்து வேலைக்­குச் செல்­ல­லாம் என்று சொங்­சிங் நகர அதி­கா­ரி­கள் கடந்த வாரம் அறி­வித்­த­னர். அது­போல, சீனா­வின் கிழக்­குக் கட­லோ­ரப் பகு­தி­யான ஸைஜி­யாங் நகரிலும் கொவிட்-19 தொற்­றி­யோர் வேலைக்­குத் திரும்பலாம்.

உதவ தயார்: அமெரிக்கா

இத­னி­டையே, கொவிட்-19 பர­வல் அதி­க­ரிப்பை எதிர்­கொண்­டு­வ­ரும் சீனா­விற்கு உதவ தயார் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

சீனா­வில் கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த இய­லா­மல் போனால் அது உல­கப் பொரு­ளி­ய­லி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி­வி­ட­லாம் என்று அமெ­ரிக்கா எச்­ச­ரித்­துள்­ளது.

"கொவிட்-19 சார்ந்த சுகா­தார ஆத­ரவு தொடர்­பில், சீனா உள்­ளிட்ட நாடு­க­ளுக்­குத் தொடர்ந்து உதவ நாங்கள் தயா­ராக இருக்­கி­றோம். எங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், இது அர­சி­யல் சார்ந்­ததோ புவி­சார் அர­சி­யல் சார்ந்­ததோ இல்லை," என்று அமெ­ரிக்க உள்­துறை அமைச்­சின் பேச்­சா­ளர் நெட் பிரைஸ் கூறி­யி­ருக்­கி­றார்.