போதைப் புழக்கம்: சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 69 பேர் கைது

இவ்­வாண்டு ஜன­வரி மாதத்­தில் இருந்து நவம்­பர் மாதம் வரை­யிலான கால­கட்­டத்­தில், போதைப்­பொ­ருள் புழங்­கிய சந்­தே­கத்­தின்­பே­ரில் குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வ­டி­களில் 69 சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் கைது­செய்­யப்­பட்டனர் என்று மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

இது கடந்த ஆண்­டைக்காட்­டி­லும் குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­கம். சென்ற ஆண்­டில் உள்­ளூ­ரைச் சேர்ந்த ஆறு போதைப்­பு­ழங்­கி­கள் சாங்கி விமான நிலை­யத்­தி­லும் மற்ற சோத­னைச்­சா­வ­டி­க­ளி­லும் பிடி­பட்­ட­னர்.

அதற்கு முந்­திய 2020ஆம் ஆண்­டில் இதே கார­ணத்­திற்­காக 30 பேர் கைதா­கி­னர்.

அதே நேரத்­தில், கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லுக்கு முன்­பி­ருந்த எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் இது குறை­வு­தான். கடந்த 2019ஆம் ஆண்­டில், சோத­னைச்­சா­வ­டி­களில் 132 சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வாசி­களும் போதைப்­பொ­ருள் புழங்­கி­ய­தற்­கா­கக் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

எல்­லாச் சோத­னைச்­சா­வ­டி­களி­லும் அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு, குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வடி ஆணை­யத்­து­டன் சேர்ந்து அவ்­வப்­போது சோதனை நட­வ­டிக்­கை­க­ளைத் தான் மேற்­கொண்டு வரு­வ­தை­யும் அது பொது­மக்­க­ளுக்கு நினை­வூட்­டி­யுள்­ளது.

“சிங்­கப்­பூ­ரின் போதைப்­பொ­ருள் சட்­டங்­களை மீறு­வோர்­மீது கடு­மை­யான அம­லாக்க நட­வ­டிக்­கையை எடுக்­கத் தயங்­க­மாட்­டோம்,” என்­றும் அவ்­வ­மைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் வெளி­நாட்­டில் இருக்­கும்­போது போதைப்­பொ­ருள் பயன்­படுத்­தி­யது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால், போதைப்­பொ­ருள் ஒழிப்­புச் சட்­டம் 8ஏ பிரி­வின்­கீழ் அவர்­கள் தண்­டிக்­கப்­ப­ட­லாம்.

போதைப்­பொ­ருள் உட்­கொண்­டது சிறு­நீர்ப் பரி­சோ­த­னை­யில் உறு­தி­யா­னால், அவர்­கள் தண்­ட­னையை எதிர்­நோக்­க­லாம்.

இவ்­வாண்டு மார்ச் 22ஆம் தேதி­யி­லி­ருந்து, 30க்கும் மேற்­பட்ட போதைப்­பொ­ருள்­களை உட­ன­டி­யா­கக் கண்­ட­றி­யக்­கூ­டிய கைய­டக்க போதைப்­பொ­ருள் சோத­னைக் கரு­வி­யைப் போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு அதி­காரி­கள் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

அத்­து­டன், ஒரு­வர் சிறிய அளவு போதைப்­பொ­ருள் வைத்­தி­ருந்­தா­லும் கண்­டு­பி­டிக்­கக்­கூ­டிய ‘அயன்ஸ்­கேன்’ கரு­வி­யை­யும் குடிநு­ழைவு சோத­னைச்­சா­வடி ஆணைய அதி­கா­ரி­கள் சோத­னைச்­சா­வ­டி­களில் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

கடந்த ஏப்­ரல் 1ஆம் தேதி சிங்­கப்­பூ­ரின் எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­ட­பின், பய­ணி­கள் போக்கு­வ­ரத்து அதி­க­ரித்து வரு­கிறது.

சாங்கி விமான நிலை­யம் வழி­யா­க­ அன்­றா­டம் 150,000 பேர் பய­ணம் செய்­கின்­ற­னர் என்­றும் வாரந்­தோ­றும் ஒரு மில்­லி­யன் பேர் பய­ணம் செய்­கின்­ற­னர் என்றும் இம்­மா­தம் 18ஆம் தேதி போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

இது, கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலை­யில் கிட்­டத்­தட்ட 75% எனக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இவ்­வாண்டு ஜன­வரி-நவம்­பர் கால­கட்­டத்­தில், சாங்கி விமான நிலை­யத்­தில் 300க்கும் அதி­க­மான கூட்டு அம­லாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தாக போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு தெரி­வித்­தது. அங்கு பய­ணி­க­ளி­டம் 5,400க்கும் அதி­க­மான சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அதே கால­கட்­டத்­தில், மற்ற சோத­னைச்­சா­வ­டி­களில் 400க்கும் அதி­க­மான கூட்டு அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றன; பய­ணி­க­ளி­டம் 27,000க்கும் அதி­க­மான சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!