இறுதிவரை உக்ரேனுக்கு உதவ அமெரிக்கா உறுதி

இறுதிவரை உக்ரேனுக்கு உதவ அமெரிக்கா உறுதி

3 mins read
e2d099af-e17a-4f9d-b9e0-823647516a6d
-

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுக்­கத் தொடங்கி 300 நாள்­கள் நிறை­வ­டைந்த நிலை­யில் உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி முதல்­த­ட­வை­யாக உத­வி­நாடி அமெ­ரிக்கா சென்­றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதி­பர் ஜோ பைட­னைச் சந்­தித்து உதவி கேட்­பது அவ­ரது அந்­தப் பய­ணத்­தின் நோக்­கம். இரு­வ­ரும் வெள்ளை மாளி­கை­யில் சந்­தித்­துப் பேசி­னர். பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளின் சந்­திப்­பி­லும் அவர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

தொடர்ந்து அமெ­ரிக்க நாடாளு­ மன்­றத்­தில் உரை­யாற்­றிய திரு ஸெலென்ஸ்கி, 44, பத்து அம்ச அமை­தித் திட்­டம் ஒன்றை அதி­பர் பைட­னி­டம் தாம் சமர்ப்­பித்து உள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

இந்த அமை­தித் திட்­டத்­தின் மூலம் வருங்­கா­லத்­தில் கூட்டு பாது­காப்பு உத்­த­ர­வா­தம் கிட்­டும் என்று தாம் நம்­பு­வ­தா­க­வும் இந்­தத் திட்­டத்­தின் ஓர் அம்­ச­மாக உச்­ச­நிலை மாநாடு ஒன்று இடம்­பெ­றும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற இரு அவை­க­ளின் கூட்­டுக் கூட்­டத்­தில் உரை­யாற்­றும் அரிய வாய்ப்பு உக்­ரே­னிய அதி­ப­ருக்­குக் கிடைத்­தது.

இதற்­கி­டையே, செய்­தி­யா­ளர்­

க­ளி­டம் பேசிய அதி­பர் பைடன், உக்­ரேன் தன்­னைத் தற்­காத்­துக்­கொள்ள தேவைப்­படும் ஆயு­தங்­

க­ளை­யும் உத­வி­க­ளை­யும் வழங்க அமெ­ரிக்கா தயா­ராக இருப்­ப­தா­கக் கூறி­னார்.

இருப்­பி­னும் எல்லா வகை­யான அதி­ந­வீன ஆயு­தங்­க­ளை­யும் உக்­ரே­னுக்கு வழங்­கி­னால் ஐரோப்­பா­வில் அமெ­ரிக்­கக் கூட்­ட­ணிக்­குப் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டும் என்­றார் அவர்.

அதே­நே­ரம், போரின் இறுதி வரை உக்­ரே­னுக்கு அமெ­ரிக்கா தோள்­கொ­டுக்­கும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தார்.

திரு ஸெலென்ஸ்கி தமது அமெ­ரிக்­கப் பய­ணத்தை முடித்­துக்கொண்டு நேற்று நாடு திரும்­பி­னார்.

அவ­ரது வரு­கை­யின்­போது உக்­ரே­னுக்கு US$1.8 பில்­லி­யன் மதிப்­புள்ள கூடு­தல் ராணுவ உதவி அறி­விக்­கப்­பட்­டது. தாக்க வரும் ஏவு­கணை, விமா­னங்­களை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அதனை முறி­ய­டிக்­கும் நவீன கரு­வி­யும் இந்த உத­வி­யில் அடங்­கும்.

ஆனால், உக்­ரே­னுக்­கான கிட்­டத்­தட்ட US$50 பில்­லி­யன் (S$67.37 பில்­லி­யன்) உதவி அடங் கிய அமெ­ரிக்க செல­வின மசோதா நேற்று முன்­தி­னம் நிறைவேற்­றப்­ப­ட­வில்லை.

வாக்­கெ­டுப்பு எது­வும் நடத்­தா­மல் செனட்­டர்­கள் மன்­றத்­தி­

லி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­னர்.

குடி­ய­ர­சுக் கட்­சி­யின் செனட்­டர்­களில் சிலர், வெளி­நா­டு­க­ளுக்கு அமெ­ரிக்கா அதிக உதவி அளிக் கிறது என எதிர்ப்­புக் குரல் கொடுத்து வரு­வ­தால் உக்­ரே­னுக்­கான உத­வி­யில் முட்­டுக்­கட்டை உரு­வா­கும் சாத்­தி­யம் ஏற்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில் தலை­ந­கர் மாஸ்­கோ­வில் தற்­காப்பு அமைச்­சில் உரை­யாற்­றிய ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின், உக்­ரே­னில் தமது ராணு­வத்­தி­டம் உள்ள பல குறை­பா­டு­களை ஒப்­புக்­கொண்­டார். ஆனா­லும் உக்­ரேன் மீதான படை­யெ­டுப்பு தொட­ரும் என்­றார் அவர். மேற்­கத்­திய நாடு­கள் தேவை­யின்றி போரைத் தூண்­டு­வ­தாக அவர் குறை­பட்­டுக்­கொண்­டார்.

இந்த ஆண்டு பிப்­ர­வரி 24ஆம் தேதி உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுக்­கத் தொடங்­கி­யது. படை­யெ­டுப்­பின்­போது பல பகு­தி­களை ரஷ்யா கைப்­பற்­றி­ய­போ­தி­லும் அந்­தப் பகு­தி­களை உக்­ரேன் படை­யி­னர் படிப்­ப­டி­யாக மீட்டு வரு

வதா­கக்­ கூ­றப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், உக்­ரேன் போரை இழுத்­த­டிக்க ரஷ்யா திட்­டம் போடு­வ­தா­க­வும் புதிய பகு­தி

­க­ளைக் கைப்­பற்­று­வ­தற்­குப் பதி­லாக ஏற்­கெ­னவே தான் கைப்­பற்­றிய பகு­தி­க­ளைத் தொடர்ந்து தன்­வ­சம் வைத்­துக்­கொள்ள அது வியூ­கம் வகுத்து வரு­வ­தா­க­வும் ஊட­கச் செய்­தி­கள் கூறு­கின்­றன.