2024ல் புதிய உற்பத்தித் தொழிற்சாலை
பகுதிமின்கடத்தி சாதனம் தயாரிக்கும் 'அப்ளைட் மெட்டீரியல்ஸ்' என்னும் அமெரிக்க நிறுவனம் சிங்கப்பூரில் $600 மில்லியன் செலவில் தனது உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.
இங்கு தனது உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை அந்நிறுவனம் விரிவுபடுத்துவதன் மூலம் 1,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும். தெம்பனிஸ் இண்டஸ்ட்ரியல் கிரசென்ட்டில் 700,000 சதுர அடிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் இந்தப் புதிய தொழிற்சாலை அமைய உள்ளது.
பசுமை எரிசக்தியை உருவாக்கும் நோக்குடன் தொழிற்சாலையின் உச்சியில் 100,000 சதுர அடி பரப்பளவில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படும். இந்த அறிவிப்பை இந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.
'சிங்கப்பூர் 2030' பசுமைத் திட்டத்தை பிரதிபலிக்கும் எட்டாண்டுத் திட்டம் ஒன்றையும் அது நேற்று அறிவித்தது. சிங்கப்பூரில் தனது பணிகளை தொடர்ந்து விரிவாக்கம் செய்ய இந்தத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கெனவே தனது உற்பத்தியில் பெரும்
பாலானவற்றை அமெரிக்காவிற்கு வெளியே செய்து வருகிறது.
புதிய தொழிற்சாலை அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான கேரி டிக்கெர்சன், கடந்த 30 ஆண்டுகளாக சிங்கப்பூர் தனது நிறுவனத்தின் உத்தி பூர்வ மையமாக இருந்து வருகிறது என்றார்.
அதன் தொடர்ச்சியாக புதிய முதலீட்டுடன் வெற்றிப்பாதையில் தனது நிறுவனம் அடியெடுத்து வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகக் கணினிச் சில்லு உற்பத்தி இன்னும் பத்தாண்டுகளில் இப்போது இருப்பதைக் காட்டிலும் இருமடங்காக உயரும் சாத்தியம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலகச் சந்தையில் இந்த உற்பத்தியின் வளர்ச்சி அப்போது US$1 டிரில்லியனைத் (S$1.35 டிரில்லியன்) தொடும் என்று மதிப்பிட்டார்.
கடந்த 1991ஆம் ஆண்டு சிறிய விற்பனை அலுவலகம் மூலம் சிங்கப்பூரில் கால்பதித்த இந்நிறு வனம் உற்பத்தியிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது இதில் 2,500 பேர் பணிபுரிகின்றனர்.
புதிய தொழிற்சாலை 2024ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்றும் அது முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும் கூடுதலாக 1,000 பேர் வேலையில் சேர்க்கப்படுவார் கள் என்றும் நிறுனத்தின் தென் கிழக்காசிய வட்டாரத் தலைவர் பிரயன் டான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
உற்பத்தி, வாடிக்கையாளர் ஆதரவு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியன தொடர்பான பணிகளில் புதியவர்கள் அமர்த்தப் படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய உற்பத்தித் தொழிற்
சாலைக்கான நிலம் திருத்தும் பணியில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தொழிற்சாலை வடி
வமைப்புக்கான வரைகலையைப் பார்வையிட்டார்.

