தமிழ்நாட்டில் கொள்ளை நோய்க்கு முந்திய 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சாலை விபத்து களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற மேலவையில் நேற்று முன்தினம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10,525 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 15,384ஆக அதிகரித்தது.
அதேபோல மகாராஷ்டிரா, பீகார், மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங் கானா ஆகிய மாநிலங்களி லும் விபத்து உயிரிழப்புகள் கடந்த ஆண்டு அதிகரித்த தாக மன்றத்தில் தெரி விக்கப்பட்டது. அதேவேளை, ஆகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களிலும் விபத்தால் மாண்டோர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை 2030ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு குறைக்க இந்திய அரசு இலக்கு வகுத்துள்ளது.

