பெனடால் மாத்திரை விற்பனைக்குக் கட்டுப்பாடு

பெனடால் மாத்திரை விற்பனைக்குக் கட்டுப்பாடு

2 mins read
f748e4da-bfbe-40e5-ac10-fa62f10c8323
-

காய்ச்­சல், சளி மருந்­து­க­ளுக்­கான தேவை கடந்த வாரம் திடீ­ரென்று உயர்ந்­த­தைத் தொடர்ந்து ஃபேர் பி­ரைஸ் பேரங்­கா­டி­யில் பென­டால், நியூ­ரோ­ஃபென் மாத்­தி­ரை­களை வாங்க கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்டு உள்­ளது.

அதன்­படி, ஒரு­வர் நான்கு பொட்­ட­லங்­களை மட்­டுமே வாங்க முடி­யும். இந்­தக் கட்­டுப்­பாடு நேற்று முன்­தி­னம் முதல் நடப்­புக்கு வந்­துள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­கள் இதனை அறிந்­து­கொள்­ளும் வகை­யில் ஃபேர்பி­ரைஸ் பேரங்­காடி நுழை­வா­யி­லில் அறி­விப்­புப் பலகை வைக்­கப்­பட்டு உள்­ள­தாக பேரங்­கா­டி­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளின் சொந்­தத் தேவைக்கு மட்­டுமே இந்த மருந்­துப் பொருள்­களை வாங்­கு­மாறு அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மேலும், பென­டால் நியூ­ரோ­ஃ­பென் மாத்­தி­ரை­க­ளுக்கு மாற்­றாக இதர நிறு­வ­னங்­க­ளின் காய்ச்­சல், சளி மருந்­து­களை வாங்­க­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

இந்த இரு மாத்­தி­ரை­களும் உள்­ளூர் தயா­ரிப்­பு­கள். இங்­குள்ள பேரங்­கா­டி­க­ளி­லும் மருந்­துக்­க­டை­க­ளி­லும் மட்­டுமே இவை கிடைக்­கும்.

இதற்­கி­டையே, பென­டால் மாத்­தி­ரை­யைத் தயா­ரிக்­கும் ஹேலி­யன் நிறு­வ­னம், சாதனை அள­வாக பென­டால் மாத்­தி­ரை­கள் உற்­பத்தி செய்­யப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்து உள்­ளது. இங்­குள்ள சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­கள் இந்த மாத்­தி­ரைக்­கான தேவை அதி­க­ரிப்­பைச் சந்­திப்­பார்­கள் என்­பது தனக்­குத் தெரி­யும் என்­றும் அது கூறி­யது.

பென­டால் போன்ற சளி, காய்ச்­சல் மருந்­து­க­ளுக்­கான தேவை அண்­மைய ஆண்­டு­க­ளாக இது­வரை இல்­லாத அள­வுக்கு அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் அந்­தப் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

வாட்­சன்ஸ் மருந்­துக் கடை­களும் பென­டால் தயா­ரிப்­பு­க­ளின் விற்­ப­னைக்கு வரம்பு கொண்டு வந்­துள்­ளது. அதன்­படி, ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ள­ரும் ஆறு பென­டால் பொட்­ட­லங்­களை மட்­டுமே இந்­தக் கடை­களில் வாங்­க­மு­டி­யும்.

இந்­நி­லை­யில், ஒரு மருந்­துக்­கான தேவை திடீ­ரென்று அதி­க­ரித்து அது விற்­றுப்­போ­னால் அதனை மறு­ப­டி­யும் இருப்பு வைக்க அதி­கக் காலம் ஆக­லாம் என்­றும் எனவே வாடிக்­கை­யா­ளர்­கள் ஒரே நிறு­வ­னத் தயா­ரிப்­பு­களை நாடு­வ­தற்­குப் பதில் மாற்று நிறு­வ­னத்­தின் மருந்­து­க­ளை­யும் வாங்­க­லாம் என்று சுகா­தார அமைச்சு பரிந்­து­ரைத்­தது.