திடீரென சாலை உள்வாங்கியதால் வாகனங்கள் கவிழ்ந்தன; மருத்துவமனையில் அறுவர்

திடீரென சாலை உள்வாங்கியதால் வாகனங்கள் கவிழ்ந்தன; மருத்துவமனையில் அறுவர்

1 mins read
fc731236-4078-421a-b24f-56ed5866e543
-

இந்­தி­யா­வின் தெலுங்­கானா மாநி­லம், ஹைத­ரா­பாத் ந­க­ரின் கோஷாமகால் பகு­தி­யி­லுள்ள சாலை நேற்று முன்­தி­னம் நண்­ப­கல் நேரத்­தில் திடீ­ரென உள்­வாங்கி, ஏறக்­கு­றைய 50 மீட்­டர் நீளத்­திற்­குப் பள்­ளம் ஏற்­பட்­டது (படம்). இத­னால், சாலை­யோ­ரம் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னங்­களும் காய்­கறி வண்­டி­களும் நிலைகவிழ்ந்து சேத­ம­டைந்­தன.

இவ்விபத்தில் காய்­க­றிக் கடைக்­கா­ரர்­கள், அவர்­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள், அப்­ப­கு­தி­யில் நடந்து சென்­றோர் எனப் பல­ரும் பள்­ளத்­தில் விழுந்­த­னர். அவர்­க­ளின் கூக்­கு­ரல் கேட்டு, அரு­கி­லுள்ள கடைக்­கா­ரர்­களும் உள்­ளூர்­வா­சி­களும் அவர்­களைக் காப்­பாற்­றி­னர். அறு­வ­ருக்­குச் சிறிய அள­வில் காய­மேற்­பட்­டது. அவர்­கள் அரு­கி­லுள்ள மருத்­து­வ­மனை­களில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

அந்­தச் சாலைப்­ப­கு­திக்­குக் கீழே பாதா­ளச் சாக்­கடை ஓடு­வதே இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

தமது தள்ளுவண்­டி­யை­யும் ரூ.5,000 மதிப்­புள்ள காய்­க­றி­க­ளை­யும் பறி­கொ­டுத்­த­தால் செய்வதறியாது தவிக்கிறார் காய்­கறி வணி­க­ரான திரு­வாட்டி லட்­சுமி. "பாதா­ளச் சாக்­கடை அமைக்­கப்­பட்டு 50 ஆண்­டு­களுக்கு மேலா­கிறது. அத­னைச் சீர­மைக்க எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. அவ்­வப்­போது சோதித்து, பரா­ம­ரிப்­புப் பணி­களை மேற்­கொண்­டி­ருந்­தால் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தி­ருக்­காது," என்­றார் அவர்.

நிகழ்­வி­டத்­தைப் பார்­வை­யிட்ட கோஷா­ம­கால் எம்­எல்ஏ, பாதிக்­கப்­பட்ட சிறு­வ­ணி­கர்­க­ளுக்கு அர­சாங்­கம் நிதி­யு­தவி செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.