கட்டுக்கடங்காத கிருமிப் பரவல்; சீனா திணறல்

கட்டுக்கடங்காத கிருமிப் பரவல்; சீனா திணறல்

3 mins read

சீனா­வில் கொவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்­கிறது. அந்­நாட்­டின் பல்­வேறு நக­ரங்­க­ளி­லும்

மாநி­லங்­க­ளி­லும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை மள­ம­ள­வென ஏற்­றம் கண்டு வரு­கிறது. சீனா­வில் கொவிட்-19 பாதிப்பு அடுத்த மாதம் உச்­சத்தை எட்­டும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு சீனா­வின் வூஹான் நக­ரில் கொவிட்-19 தலை­தூக்­கி­யது. அதன் பிறகு தற்­போது அங்கு ஆக மோச­மான கொவிட்-19 நெருக்­க­டி­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்­கையை இனி வெளி­யி­டப்­போ­வ­தில்லை என்று சீனா­வின் தேசிய சுகா­தார ஆணை­யம் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது. கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் சீனா­வில் ஏற்­பட்­டுள்ள உண்­மை­நிலவரத்தை அந்த ஆணை­யம் இது­வரை குறைத்­துக்­காட்­டி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் வரை கொவிட்-19 அறவே இல்­லாத நிலையை எட்ட சீனா இலக்கு கொண்­டி­ருந்­தது. ஆனால் இம்­மாத தொடக்­கத்­தி­லி­ருந்து அது கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி வரு­கிறது. கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து, சீனா­வில் கொவிட்-19 கட்­டுக்­க­டங்­கா­மல் பரவி வரு­கிறது. இவ்­வ­ளவு காலம் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள், முடக்­க­நி­லை­களை நடை­மு­றைப்­

ப­டுத்­தி­ய­தா­லும் சீனா­வில் பலர் இன்­னும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­தா­லும் அந்­நோய்க்கு எதி­ராக அந்­நாட்டு மக்­க­ளுக்­குப் போது­மான எதிர்ப்பு சக்தி இல்லை என்று

சுகா­தாரத்துறை நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். முத­லில் தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் பெரு­ம­ள­வி­லான பாதிப்பு ஏற்­பட்­டது. பிறகு நாட்­டின் மற்ற பகு­தி­களும் வெகு­

வா­கப் பாதிக்கப்­பட்­டன. ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை சீனா­வெங்­கும் பரவி வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

இதற்­கி­டையே, சீனா­வின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள உற்­பத்தி, தொழில்­நுட்ப மைய­மான சேஜி­யாங் மாநி­லத்­தில் நாள்­

தோ­றும் ஏறத்­தாழ ஒரு மில்­லி­யன் பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்

­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அடுத்த இரண்டு வாரங்­களில் இந்த எண்­ணிக்கை இரு­ம­டங்கு அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வு­கிறது. அதன் பிறகு நிலைமை சீர­டை­யும் என்று அம்­மா­நி­லத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சீனா­வில் கடந்த வாரம் ஒவ்­வொரு நாளும் கிட்­டத்­தட்ட 37 மில்­லி­யன் பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டிருக்கக்கூடும் என்று அந்­நாட்­டின் தேசிய சுகா­தார ஆணை­யம் கூறி­யது. ஆனால் உண்மை நில­வ­ரம் இதை­விட மோச­மாக இருக்­கக்­கூ­டும் என்று மற்ற நாடு­க­ளைச் சேர்ந்த சுகா­தா­ரத்­துறை நிபு­­ணர்­கள் நம்­பு­கின்­ற­னர்.

தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில்

இட­மில்லை

சீனா­வில் உள்ள மருத்துவ மனைகளில் படுக்­கைப் பற்­றாக்­குறை நில­வு­வ­தா­க­வும் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் அறவே இடம் இல்­லாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்­நாட்­டின் மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அவ­ச­ர­நி­லைப் பிரி­வு­க­ளி­லும் காய்ச்­

ச­லுக்­குச் சிகிச்சை அளிக்­கப்­படும் மருந்­த­கங்­க­ளி­லும் மற்ற வார்­டு­

க­ளி­லும் இதே நிலை ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

இது­போன்ற மருத்­துவ நெருக்­க­டி­நி­லை­யைப் பார்த்­த­தில்லை என்று பெய்­ஜிங்­கில் பணி­பு­ரி­யும் டாக்­டர் ஹாவர்ட் பெர்ன்ஸ்­டைன் கூறி­னார்.

மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் செல்­லும் நோயா­ளி­களில் பெரும்­பா­லா­னோர் முதி­ய­வர்­கள் என்றும் அவர்­களில் பல­ரி­டம் கொவிட்-19, நிமோ­னியா ஆகி­ய­வற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­

வ­தாகவும் அவர் தெரி­வித்­தார்.

தொடர்ந்து அலை­மோ­தும் நோயா­ளி­க் கூட்­டத்­தைச்

சமா­ளிக்க முடி­யா­மல் மருத்­து­வர்­கள் கடும் மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருப்­ப­தாக டாக்­டர் பெர்ன்ஸ்­டைன் கூறி­னார்.

மரண எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தால் பெய்­ஜிங்­கில் உள்ள தக­னச் சாலை­க­ளுக்­கும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

பெய்­ஜிங்­கில் உள்ள ராஃபிள்ஸ் மருத்­து­வ­மனை போன்ற தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளி­ட­மி­ருந்து ஃபைசர் நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள பேக்ஸ்லோவிட் மருந்தை வாங்க சீனா­வில் உள்ள பலர் விரும்­பு­வ­தா­க­வும் ஆனால் அந்த மருந்து போது­மான அள­வில் இல்லை என்­றும் ராஃபிள்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் தலைமை மருத்­து­வர் டாக்­டர் சோனியா ஜுடார்ட் பொரியோ தெரி­வித்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­

வ­தை­க் காட்டிலும் மருந்து உட்­கொள்ள சீனா­வில் பலர் விரும்பு­ வ­தாக அவர் தெரிவித்­தார். ஆனால் மருந்து தடுப்­பூ­சிக்கு நிக­ரா­காது என்­றார் அவர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக சீனாவில் பணிபுரிந்து வரும் டாக்டர் ஜுடார்ட் பொரியோ, சீனாவில் நிலைமை மோசமடையும் என்று அச்சம் தெரிவித்தார்.