கிறிஸ்துமஸ் தினத்தன்று பிலிப்பீன்ஸ் வெள்ளத்தில் தத்தளித்தது. ஏறத்தாழ 46,000 பேர் வீடுகளி
லிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலிப்பீன்ஸின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் காரணமாகக் குறைந்தது எட்டு பேர் மாண்டனர். 19 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"சில பகுதிகளில் வெள்ளநீர் நெஞ்சு அளவுக்கு உயர்ந்தது. ஆனால் இன்று மழை குறைந்துள்ளது," என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பிலிப்பீன்ஸ் குடிமைத் தற்காப்புப் படை நேற்று கூறியது.
வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒசாமிஸ் நகரிலிருந்தும் கிளாரின் நகரிலிருந்தும் பல குடும்பங்களைக் காப்பாற்றியதாக பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படை தெரிவித்தது.
ஆரஞ்சு நிற பாதுகாப்பு மிதவை ஆடைகளை அணிந்த மீட்புப் பணியாளர்கள், இடுப்பு அளவிலான வெள்ளநீரில் குழந்தைகளை வீடு
களிலிருந்து மீட்ட காட்சிகளைக் காட்டும் படங்களை அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.
ஜிமேனெஸ், டுடேலா நகரங்களில் வெள்ளத்தில் மூழ்கி நால்வர் மாண்டதாகத் தெரிவிக்கப்
பட்டது.
இதற்கிடையே, பலத்த காற்று, பேரலைகள் காரணமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதாக கடலோரக் காவல்படை கூறியது. படகில் இருந்த இருவர் மாண்டதாகவும் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
லிப்மனான், டினாம்பாக் நகரங்களிலும் இரண்டு பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் ஒரு பெண் குழந்தையும் அடங்கும்.
இந்நிலையில், காணாமல் போனவர்களில் பலர் கடலில் மீன்
பிடிக்கச் சென்றவர்கள் என்று அறியப்படுகிறது. கனமழை, பலத்த காற்று காரணமாக கடல்
கொந்தளிப்பாக இருந்ததாகவும் அவர்கள் கடலில் விழுந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

