இரு ஆண்டுகளில் 5 தடுப்பூசி ஆலைகள்

இரு ஆண்டுகளில் 5 தடுப்பூசி ஆலைகள்

2 mins read

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி

தயா­ரிக்­கும் ஆலை ஒன்­று­கூட இல்லை.

ஆனால் சிங்கப்பூரில் தடுப்­பூசி தயா­ரிக்­கும் ஆலை­களை அமைக்கப் போவதாக கடந்த இரண்டு

ஆண்­டு­களில் ஐந்து மருந்து

தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கடப்­பாடு தெரி­வித்­துள்­ளன.

தெர்மோ ஃபிஷர் சைன்டிஃபிக், பயோஎன்டெக், சனோஃபி, ஹில்லிமன் லெபோரட்டொரிஸ், எம்எஸ்டி அல்லது மெர்க் அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளைத் தொடங்குகின்றன.

அந்த ஆலை­களில் ஒவ்­வோர் ஆண்­டும் பில்­லி­யன் கணக்­கான தடுப்பூசிகள் தயா­ரிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த ஆண்டு தொடக்­கத்­தி­ லி­ருந்து வழக்­க­மா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் தடுப்­பூ­சி­க­ளி­லி­ருந்து ஆக அண்­மைய தடுப்­பூ­சி­கள் வரை ஆலை­களில் தயா­ரிக்­கப்­படும்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கற்­றுத் தந்த பாடங்­கள் தடுப்­பூ­சி தயா­ரிப்பு ஆலை­க­ளின் முக்­கி­யத்­து­வத்­தைப் புரி­ய­வைத்­துள்­ளன.

எனவே, அவற்றை அமைக்க திடீ­ரென்று பெரு­ம­ள­வி­லான முத­லீட்­டுத் தொகை­கள் குவிந்­துள்­ளன.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது தடுப்­பூ­சி­க­ளைத்

தயா­ரித்த நாடு­கள் அவற்­றின் சொந்த தேவை­க­ளைப் பூர்த்தி செய்த பிறகே எஞ்­சி­யி­ருந்த தடுப்­பூ­சி­க­ளைப் பிற நாடு­க­ளுக்கு அனுப்பி வைத்­தன.

எனவே, சிங்­கப்­பூ­ருக்­குத் தேவை­யான தடுப்­பூ­சி­க­ளைத்

தயா­ரிக்க இந்த ஆலை­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன.

இனி கிரு­மித்­தொற்று

நெருக்­க­டி­நிலை ஏற்­பட்­டால் அதை எதிர்­கொள்ள தென்­கி­ழக்­கா­சி­யா­வுக்கு உத­வும் வகை­யில் இந்­தத் தடுப்­பூ­சி தயா­ரிப்பு ஆலையை அமைப்­ப­தாக அது கூறி­யது.

"தொற்றுநோய்­களை எதிர்­கொள்ள கட்­டுப்­ப­டி­யான விலை­யி­லான தடுப்­பூ­சி­க­ளைத் தயா­ரிக்க நாங்­கள் முயற்சி மேற்­கொண்டு வரும் வேளை­யில் தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லும் மற்ற நாடு­க­ளி­லும் கால் பதிக்க ஹில்­லி­மன் லொபோ­ரட்­டொ­ரி­சுக்கு சிங்­கப்­பூர் முக்­கி­ய­மான தள­மாக உள்­ளது," என்று அதன் தலைமை நிர்­வாக அதி­காரி

டாக்­டர் ராமன் ராவ் கூறி­னார்.