தர்மன்: ஒவ்வொரு சமூகத்திற்கும் சிறப்பிடமுண்டு

தர்மன்: ஒவ்வொரு சமூகத்திற்கும் சிறப்பிடமுண்டு

2 mins read
f6079fe1-d700-4870-a4d8-679cd040c236
-

சிங்­கப்­பூ­ரில் சிறு­பான்­மைச் சமூ­கங்­களும் அர­வ­ணைக்­கப்­பட்டு, கொண்­டா­டப்­ப­டு­வது அதன் ஒற்­று­மை­யைப் பறை­சாற்­று­வ­தாக உள்­ளது என்று மூத்த அமைச்­சர் தர்மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்­திருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ர் சீக்­கிய சமூ­கம் நான்­காண்­டு­க­ளுக்­குப் பிறகு சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் 'நாம் ராஸ் கீர்த்­தன் தர்­பார்' எனும் விழா­வைக் கொண்­டா­டி­யது. இசைக் கச்­சேரி­கள், கண்­காட்சி மூல­மாக சீக்­கிய கலா­சா­ரத்­தை­யும் மர­பை­யும் பொது­மக்­கள் அறிந்­து­கொள்­வதை இலக்­கா­கக் கொண்டு, ஈராண்­டு­களுக்கு ஒரு­முறை இந்த நான்கு நாள் நிகழ்ச்சி நடத்­தப்­ப­டு­கிறது.

இது­தான் இவ்­வட்­டா­ரத்­தில் இடம்­பெ­றும் சீக்­கிய சமூ­கத்­தின் ஆகப் பெரிய ஒன்­று­கூ­டல் நிகழ்வு.

விழா­வின் இரண்­டாம் நாளான கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று சமு­தா­யக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான தர்­மன் சண்­மு­க­ரத்­னம் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

"சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வொரு சமூ­கத்­திற்­கும் சிறப்­பான இடம் உள்­ளது என்­பதை நாம் அறிந்­து­கொள்ள வேண்­டும். அதி­லும், ஒரு சிறு­பான்மை இனத்­தி­லும் சிறு­பான்­மைச் சமூ­க­மாக சீக்­கிய சமூ­கம் திகழ்­வது அதற்­கு­ரிய இடத்தை மேலும் சிறப்­பா­ன­தாக்கு­கிறது," என்­றார் திரு தர்­மன்.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக கடந்த 2020ஆம் ஆண்டு இவ்விழா இடம்­பெறா­த­தால் இவ்­வாண்டு நிகழ்ச்சி சிறப்­புக்­கு­ரி­யது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பதி­னைந்­தாம் நூற்­றாண்­டில் இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லத்­தில் சீக்­கிய சம­யம் தோன்­றி­யது. சிங்­கப்­பூ­ரில் இப்­போது ஏறத்­தாழ 15,000 சீக்­கி­யர்­கள் உள்­ள­னர்.

பத்­தா­வது முறை­யாக நடத்­தப்­பட்ட 'நாம் ராஸ்' நிகழ்ச்­சிக்­குத் தென்­கி­ழக்­கா­சி­யா­வில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் வரு­வர் என எதிர்­பார்ப்­ப­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் கூறி­னர். இந்­தியா, பிரிட்­டன் போன்ற நாடு­களில் இருந்து சீக்­கிய சமூ­கப் பிர­ப­லங்­களும் வரு­கை­ய­ளித்­த­னர்.

அவ்­வ­கை­யில், பிரிட்­ட­னைச் சேர்ந்த ஓவி­யக் கலை­ஞர் அமன்­தீப் சிங், 36, இம்­முறை 'நாம் ராஸ்' நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்­தார். 'இன்­கிவிசிட்­டிவ்' என்று அழைக்­கப்­படும் அவர், சீக்­கி­யக் கலா­சா­ரம், வர­லாறு ஆகி­ய­வற்­றின் பின்­ன­ணி­யில் ஓவி­யம் வரைந்து வரு­கி­றார். தமது கைவண்­ணத்­தில் திரு தர்­ம­னைப் பட­மாக வரைந்து, அதை அவ­ருக்­குப் பரி­சாக வழங்கி வியப்­ப­ளித்­தார் திரு அமன்­தீப்.