தைவானில் கட்டாய ராணுவப் பயிற்சி ஓராண்டாக நீட்டிப்பு

தைவானில் கட்டாய ராணுவப் பயிற்சி ஓராண்டாக நீட்டிப்பு

3 mins read
a7537f22-6902-4261-8a1a-07af91fa8e2c
-

தைவா­னில் இப்­போது நான்கு மாதங்­க­ளாக இருக்­கும் கட்­டாய ராணு­வப் பயிற்­சிக்­கா­லம் ஓராண்­டாக உயர்த்தப்படவுள்ளது.

சீனா­வு­டன் பதற்­றம் நீடித்­து­வரும் நிலையில், போருக்கு தயா­ராக இருக்­கும் நிலையை வலுப்­படுத்­தும் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக தைவான் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.

"ஆகஸ்ட்­டில் இடம்­பெற்ற சீனா­வின் ராணு­வப் பயிற்­சிக்­குப் பிறகு, அந்­நாட்­டின் அச்­சு­றுத்­தல் இன்­னும் மோச­மா­கி­விட்­டது," என்று நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது தைவான் அதி­பர் சை இங் வென் குறிப்­பிட்­டார்.

யாரும் போரை விரும்­பு­வ­து இல்லை என்ற அவர், ஆனா­லும் அமை­தி­யானது வானத்­தி­லி­ருந்து விழு­வ­தில்லை என்­றும் சொன்­னார்.

கட்­டாய ராணு­வப் பயிற்சி மேம்­ப­டுத்­தப்­படும் என்று உறு­தி­ அ­ளித்­துள்ள அதி­பர் சை, துப்­பாக்­கிச் சுடு­தல் பயிற்­சி­யும் போர்ப் பயிற்­சி­யும் அதிக அள­வில் இருக்­கும் என்­றும் குறிப்­பிட்­டார்.

ஓராண்­டுக் கட்­டாய ராணு­வப் பயிற்சி 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து நடப்­பிற்கு வரும். 2005 ஜன­வரி 1ஆம் தேதி அல்­லது அதற்­குப்­பின் பிறந்த தைவா­னிய ஆண்­கள் இவ்­வி­திக்கு உட்­பட்­டாக வேண்­டும்.

அவர்­க­ளுக்­கான ஊதி­ய­மும் கிட்­டத்­தட்ட நான்கு மடங்­காக உயர்த்­தப்­ப­ட­வுள்­ளது. இப்­போது கட்­டாய ராணுவ சேவை­யின்­போது மாத ஊதி­ய­மாக 6,510 நியூ தைவான் டாலர் (S$285) வழங்­கப்­பட்டு வரும் நிலை­யில், அது 26,307 நியூ தைவான் டால­ராக (S$1,151) உயர்த்­தப்­பட இருக்­கிறது.

தைவா­னைத் தன்­னி­ட­மி­ருந்து பிரிந்த பகு­தி­யா­கக் கரு­தும் சீனா, அதனை மீண்­டும் தன்­னு­டன் ஒன்றிணைக்க முயல்­கிறது. அந்­நோக்­கத்­து­டன் சீனா அண்­மைய மாதங்­க­ளாக தைவான் மீதான ராணுவ நெருக்­கு­தல்­க­ளை­யும் அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் நேன்சி பெலோசி கடந்த ஆகஸ்ட் மாதம் தைவான் சென்­றது சீனா­விற்கு ஆத்­தி­ர­மூட்­டி­யது. அவ­ரது பய­ணத்தை வன்­மை­யா­கக் கண்­டித்த சீனா, தைவான் தீவிற்கு மேலே ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சி­யது உட்­பட அந்­நாட்­டைச் சுற்றி பல்­வேறு ராணு­வப் பயிற்­சி­களை மேற்­கொண்­டது.

சீனா­வை­யும் தைவா­னை­யும் பிரிக்­கும் தைவான் நீரி­ணை­யைத் தாண்டி சீனப் போர்க்­கப்­பல்­கள் செல்­வ­தும் போர் விமா­னங்­கள் பறப்­ப­தும் தொடர்­க­தை­யாகி வரு­கிறது.

இத­னை­ய­டுத்து, தைவா­னில் 20 வய­தான அல்­லது அதற்­கு­மேல் வய­து­டை­ய­வர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில், கிட்­டத்­தட்ட 73 விழுக்­காட்­டி­னர் கட்­டாய ராணுவ சேவையை ஓராண்­டாக உயர்த்­து­வ­தற்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

ஆயி­னும், கட்­டாய ராணுவ சேவையை நீட்­டிப்­பது போரின்­போது எந்த அள­விற்கு உத­வும் என்­ப­தில் சந்­தே­க­மி­ருப்­ப­தா­கப் பதின்ம வய­தி­னர் பல­ரும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­த­னர்.

"கற்­றுக்­கொள்­ளப்­போ­வது அதி­க­மில்லை என்­ப­தால் தைவா­னில் ராணு­வப் பயிற்சி என்­பது முற்­றி­லும் வீண்­செ­யல்," என்று சொன்­னார் உயர்­நி­லைப் பள்ளி மாண­வ­ரான லியாவ் குவோ சென், 16.

இருந்தாலும், "உக்­ரே­னில் நிகழ்ந்­த­தைப் பார்க்­கும்­போது, போர் அச்­சு­றுத்­தல் இருப்­பது உண்­மை­தான் என்­பதை உண­ர­லாம். அத­னால், எங்­க­ளது ராணு­வப் பயிற்­சி­யில் மாற்­றங்­கள் இடம்­பெறு­வ­தைத் தவிர்க்க முடி­யாது," என்­றும் அவர் கூறி­னார்.

இத­னி­டையே, அறி­விக்­கப்­பட்­டுள்ள மாற்­றங்­கள் தைவா­னின் உறுதிப்பாட்டை வெளிக்­காட்­டு­வதாக அமைந்­துள்­ள­தால், அவற்­றைச் சரி­யான திசையை நோக்­கிய நல்ல முயற்சி என்று தற்­காப்பு வல்­லு­நர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

"தைவான் தனது கட்­டாய ராணு­வப் பயிற்­சிக் காலத்தை அதி­க­ரிக்­க­வில்லை எனில், தன்­னைத் தற்­காத்­துக்­கொள்­வ­தில் தைவா­னின் நிலை குறித்து அமெ­ரிக்­கா­வும் மற்ற நாடு­களும் வன்­மை­யா­கக் கேள்­வி­யெ­ழுப்­பும். தைவா­னைப் பொறுப்­பற்ற நாடாக அவை பார்க்­கக்­கூ­டும்," என்று தைவா­னின் தேசிய தற்­காப்பு, பாது­காப்பு ஆய்­வுக் கழ­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் சென் லியாங் சி கூறி­னார்.

தைவா­னில் முன்­னர் ஈராண்­டாக இருந்த கட்­டாய ராணு­வப் பயிற்­சிக்­கா­லம் படிப்­ப­டி­யா­கக் குறைக்­கப்­பட்டு, கடந்த 2013ஆம் ஆண்­டில் நான்கு மாதங்­கள் என்ற நிலையை எட்­டி­யது.

இப்­போ­தைக்கு, தைவா­னில் தொழில்­முறை ராணு­வப் படை­யி­ன­ரின் எண்­ணிக்கை 162,000 ஆக இருக்­கிறது. இது அதன் இலக்­கைக் காட்­டி­லும் 7,000 குறைவு.