வெளிநாடு செல்ல சீனர்கள் பேரார்வம்

வெளிநாடு செல்ல சீனர்கள் பேரார்வம்

2 mins read

கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதி ரத்து

வரும் ஜன­வரி மாதம் 8ஆம் தேதி­யி­லி­ருந்து சீனா செல்­வோர் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தேவை­யில்லை.

கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்­கும் கொள்­கை­யு­டன் கிட்­டத்­தட்ட மூன்­றாண்­டு­க­ளாக சீனா தனது எல்­லை­களை மூடி வைத்­து இருக்கிறது.

இந்­நி­லை­யில், கட்­டா­யத் தனி­மைப்­ப­டுத்­தல் விதி நீக்­கப்­ப­ட­வுள்ள செய்­தி­யைச் சீன சமூக ஊட­க­வாசி­கள் ம­கிழ்ச்­சி­யு­டன் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

'இனி வசந்த காலமே' என்று அவர்­களில் ஒரு­வர் கருத்து பதி­விட்­டுள்­ளார்.

வெளி­நா­டு­க­ளுக்­கான விமா­னங்­கள் குறித்து இணை­யத்­தில் தேடு­வது பல மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக அர­சாங்க ஊட­கம் தெரி­வித்­துள்­ளது. பய­ணத்­த­ள­மான 'டோங்­செங்'கில் தேடல் 850% கூடி­யுள்­ள­தா­க­வும் விசா குறித்து விவ­ரம் கேட்­பது பத்து மடங்கு அதி­க­மா­கி­யுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அதே நேரத்­தில், பய­ணச்­சீட்டு விலை உயர்த்­தப்­ப­டாது என்­றும் அவர்­கள் நம்­பு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், ஹாங்­காங்­கில் இருந்து முக்­கி­யச் சீன நக­ரங்­களுக்­குச் செல்­லும் விமா­னங்­கள் குறித்த இணை­யத் தேட­லும் அதி­க­ரித்­து இருக்கிறது.

குறிப்­பாக, ‌ஷாங்­காய், பெய்­ஜிங், ஹங்ஸோ, செங்டு, நான்­ஜிங் ஆகிய நக­ரங்­க­ளுக்­கான விமா­னங்­கள் குறித்­து­தான் அதி­க­மா­னோர் தேடு­கின்­ற­னர்.

இத­னி­டையே, கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் சீனா­வில் மருத்­து­வ­ம­னை­கள் நிரம்பி வழி­வ­தா­க­வும் முதி­ய­வர்­க­ளின் இறப்பு கூடி­ உள்­ள­தா­க­வும் அங்­கி­ருந்து வரும் செய்­தி­கள் கூறு­வ­தாக 'பிபிசி' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

ஆனால், கொவிட்-19 பாதிப்பு குறித்த அதி­கா­ர­பூர்வ தர­வு­களை வெளி­யி­டு­வ­தைச் சீன அர­சாங்­கம் நிறுத்­தி­விட்­ட­தால் உண்­மை­யான நில­வ­ரம் தெரி­ய­வில்லை.

ஆனா­லும், ஒவ்­வொரு நாளும் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் புதி­தாக கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­வ­தா­க­வும் 5,000 மர­ணங்­கள் பதி­வா­வ­தா­க­வும் 'ஏர்­ஃபி­னிட்டி' என்ற பிரிட்­டிஷ் சுகா­தா­ரத் தரவு நிறு­வ­னம் மதிப்­பிட்­டுள்­ள­தாக 'ராய்ட்­டர்ஸ்' செய்தி தெரி­விக்­கிறது.

அடுத்த சில மாதங்­களில் அங்கு ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் பேர் இறக்­கக்­கூ­டும் என்­றும் ஆய்­வு­கள் கணித்­துள்­ளன.

முக்­கிய நக­ரங்­களில் மருந்­து­களுக்­குப் பெரும் தட்­டுப்­பாடு நிலவு­கிறது. முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடாத முதிய நோயா­ளி­கள் குவி­வ­தால் அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­கள் திணறி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், "மக்­கள் தங்­களை முறை­யா­கப் பாது­காத்­துக்­கொள்ள வேண்­டும். உரிய தடுப்பு, கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­குத் தொடர்ந்து ஒத்­து­ழைப்பு அளிக்க வேண்­டும்," என்று தேசிய சுகா­தார மையத்­தைச் சேர்ந்த நோய்த்­தொற்­றி­யல் வல்­லு­ந­ரான டாக்­டர் லியாங் வானி­யன் அறி­வு­றுத்­தி­ இருக்கிறார்.