$8 பி. பங்கு வீழ்ச்சி: 36 ஆண்டுகள் சிறை

$8 பி. பங்கு வீழ்ச்சி: 36 ஆண்டுகள் சிறை

2 mins read
eeec1b6c-7abe-4230-a72b-e1d4ae569eee
-
multi-img1 of 2

சிங்­கப்­பூர் பங்­குச்­சந்­தை­யில் தந்­தி­ர­மாக ஏமாற்றி கடந்த 2013ஆம் ஆண்டு அக்­டோ­ப­ரில் பங்­கு­ வி­லை­ கிட்­டத்­தட்ட 8 பில்­லி­யன் வீழ முக்­கிய கார­ண­மாக இருந்த ஜான் சோ சீ வென்­னுக்கு 36 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரு­டன் சேர்ந்து திட்­ட­மிட்ட 58 வயது குவா சூ-லிங்­குக்கு 20 ஆண்­டு­கள் சிறையை உயர் நீதி­மன்­றம் நேற்று விதித்­தது.

இரு­வ­ரும் தங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட சிறைத்­தண்­ட­னையை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­துள்­ள­னர்.

கிட்­டத்­தட்ட நான்கு ஆண்­டு­களில் 200 நாள்களாக வழக்கு விசா­ரணை நடை­பெற்­றது. இரு­வ­ருக்­கும் எதி­ராக 349 குற்­றச்­சாட்டு­களை நீதி­மன்­றம் ஏற்­றுக்­கொண்­டது. இவ்­வாண்டு மே மாதம் இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­கள் என்று நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் சோக்கு 40 ஆண்­டு­களும் குவா­வுக்கு பத்­தொன்­ப­தரை ஆண்­டு­களும் சிறைத்­தண்­ட­னை­யாக கோரி இருந்­த­னர்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­துக்­கும் 2013ஆம் ஆண்டு அக்­டோ­ப­ருக்­கும் இடையே, புளு­மோண்ட் குழு­மம், ஏஷி­யா­சன்ஸ் கேப்­பி­டல் குழு­மம், லயன்­கோல்ட் குழு­மம் ஆகி­ய­வற்­றின் பங்கு விலை­களை அவர்­கள் தந்­தி­ர­மாக ஏறச் செய்­த­னர்.

அந்த ஏமாற்­று­ வே­லைக்­காக அவர்­கள் 187 பங்­கு­ வர்த்­த­கக் கணக்­கு­களை 20 நிதி நிறு­வ­னங்­களில் வைத்­தி­ருந்­த­னர். அந்தக் க­ணக்­கு­கள் 58 தனி­ந­பர்­கள், நிறு­வனங்­க­ளின் பெயர்­களில் இருந்தன.

மலேசிய வணிகரான சோ, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்­ப­ரி­லி­ருந்து தடுப்­புக்­கா­வ­லில் இருக்­கி­றார். அவர் இது­வரை காவ­லில் இருந்­துள்ள கால­மும் சிறைத்­தண்­ட­னை­யில் சேர்த்­துக் கொள்­ளப்­படும்.

அவரது தொழில் பங்காளியான குவா, தற்போது 4 மில்லியன் வெள்ளிப் பிணையில் வெளியில் இருக்கிறார்.

குவா­வுக்­கான சிறைத் தண்­ட­னையை தீர்­மா­னித்­த­போது, அந்­தத் திட்­டத்­தில் அவ­ருக்­குக் குறை­வான பங்­கும் பொறுப்­பும் இருந்­த­தாக உயர் நீதி­மன்ற நீதி­பதி ஹூ ஷியூ பெங் கூறி­னார். அத­னால் சோவுக்கு விதிக்­கப்­பட்­ட­தில் மூன்­றில் இரண்டு பங்கு தண்­ட­னையை குவா­வுக்கு விதிப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

இரு­வ­ரும் திட்­டத்தை பெரிய அள­வில் செயல்­ப­டுத்­தி­ய­தா­க­வும் அவர்­க­ளுக்கு நிதிச் சந்­தை­கள் செயல்­படும் முறை நன்கு புரிந்­தி­ருந்­தது என்­றும் நீதி­பதி ஹூ குறிப்­பிட்­டார். தங்­கள் லாபத்­துக்­காக 14 மாதங்­க­ளுக்கு அவர்­கள் நிதி கட்­ட­மைப்பை ஏமாற்­றி­னார்­கள். பங்­குச் சந்தை வீழ்ச்சி அடைந்து தங்­கள் திட்­டம் தோற்ற பின்­ன­ரும் அவர்­கள் நீதி நிலை­நாட்­டப்­ப­டு­வ­தைத் தடுத்­தார்­கள்.

"அவர்­க­ளின் குற்­றம் எவ்­வ­ளவு பெரிது என்­ப­தைக் காட்ட, குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆக அதி­க­மான தண்­ட­னையை விதிப்­பது அவ­சி­ய­மா­னது, முக்­கி­ய­மானது," என்­றார் நீதி­பதி ஹூ.