கொவிட்-19க்கு எதிரான போராட்டம்: 100,000 பேருக்கு சிறப்பு தேசிய விருது

கொவிட்-19க்கு எதிரான போராட்டம்: 100,000 பேருக்கு சிறப்பு தேசிய விருது

2 mins read

கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு எதி­ராக சிங்­கப்­பூ­ரில் செயல்­ப­டுத்­தப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் தங்­களின் கட­மைக்­கும் அப்­பாற்­பட்டு பங்­காற்­றிய 100,000க்கும் மேற்­பட்­டோர், தேசிய அள­வில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வர். சமூ­கம், வர்த்­த­கம், அர­சாங்­கம் ஆகிய பிரி­வு­களில் உள்ள இவர்­கள், தங்­க­ளின் பங்­க­ளிப்­புக்­கும் தியா­கங்­க­ளுக்­கும் சிறப்பு விருது பெற­வுள்­ள­தாக வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

"விருது பெறு­ப­வர்­கள், சமூ­கத்­தின் வெவ்­வேறு பிரி­வு­கள், வெவ்­வேறு துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். பொதுச் சுகா­தா­ரப் பிரி­வைச் சேர்ந்த நமது முன்­க­ளச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­களும் இதில் அடங்­கு­வர்.

"அவர்­க­ளு­டன் அர­சாங்க சார்­பற்ற அமைப்­பு­கள், தொண்­டூ­ழிய அமைப்­பு­கள், சமூக அமைப்­பு­கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய மக்­கள் துறை, பொதுச் சேவைத் துறை, தனி­யார் துறை ஆகி­ய­வை­யும் அடங்­கும்," என்­றார் அவர்.

கொள்­ளை­நோ­யின்­போது சிங்­கப்­பூ­ரர் உணர்வை வெளிப்­ப­டுத்­திய நபர்­க­ளைக் கொண்­டா­டும் வகை­யில் சாங்கி விமான நிலை­யத்­தின் முனை­யம் 1ல் நடை­பெற்று வரும் 'புரோ­ஜெக்ட் லயன்­ஹார்ட்' ஓவி­யக் கண்­காட்­சிக்கு வருகை தந்­தி­ருந்­த­போது அமைச்­சர் கான் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விருது குறித்­துப் பேசி­னார்.

"மீள்­தி­றன், ஒற்­றுமை, ஆத­ரவு ஆகி­ய­வற்­றைப் பிர­தி­ப­லிக்­கும் இந்த சிங்­கப்­பூர் உணர்வை எண்ணி நான் பெரு­மைப்­ப­டு­கி­றேன். எதிர்­கால நெருக்­கடி எது­வா­யி­னும் இந்த சிங்­கப்­பூர் உணர்­வு­டன் நம்­மால் மேலும் வலு­பெற்று, மேலும் ஒன்­று­பட்டு மீள முடி­யும் என்­ப­தில் எனக்கு நம்­பிக்கை உண்டு," என்­றார் கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ருமான திரு கான்.

விருது பெறு­வோ­ரில் பெரும்­பா­லா­னோ­ருக்கு புதிய தேசிய விரு­து­க­ளான 'கொவிட்-19 மீள்­தி­றன் விருது' அல்­லது 'கொவிட்-19 மீள்­தி­றன் சான்­றி­தழ்' வழங்­கப்­படும்.

இதற்­கி­டையே, கொவிட்-19க்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் போராட்­டத்­தில் சிறந்த முறை­யில் பங்­க­ளித்து தேசிய விரு­து­க­ளுக்­குத் தகு­தி­பெற்­றுள்ள 9,534 பேரின் பெயர்­கள் நேற்று அறி­விக்­கப்­பட்­டன.

அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் ஆலோ­ச­க­ரும் சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வச் சேவை­க­ளின் இயக்கு­நரு­மான இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக், சீனா­வின் வூஹா­னுக்கு 2020ல் சென்று அங்கு சிக்கி இருந்த சிங்­கப்­பூ­ரர்­களை ஏற்றி வந்த ஸ்கூட் விமா­னப் பணி­யாளர்­கள் ஆகி­யோ­ரும் அங்­கீ­க­ரிக்­கப்­படு­வர்.

பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி, மருத்­து­வப் பரா­ம­ரிப்பு, கண்­காணிப்பு, பரி­சோ­தனை, தடுப்­பூ­சித் திட்ட ஏற்­பாடு, பாது­காப்பு இடை­வெ­ளி­யின் மேற்­பார்வை, தங்­கு­விடு­திச் செயல்­பா­டு­கள் ஆகிய அம்­சங்­கள் தொடர்­பில் நாட­ளா­விய முயற்­சி­யாக கொவிட்-19 போராட்­டத்­தில் பங்­காற்­றி­ய­வர்­கள் அங்­கீ­கரிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

கிட்­டத்­தட்ட 99,000 பேருக்கு கொவிட்-19 மீள்­தி­றன் பதக்­க­மும் 800 குழுக்­க­ளுக்கு கொவிட்-19 மீள்­தி­றன் சான்­றி­த­ழும் வழங்­கப்­படும் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பிரி­வைச் சேர்ந்த சுமார் 4,000 பேர், பொதுப் பிரி­வைச் சேர்ந்த 4,500 பேர், தனி­யார் மற்­றும் மக்­கள் பிரி­வு­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 900 பேர் இதில் அடங்­கு­வர்.

கொவிட்-19 தொடர்­பான தேசிய விரு­து­களில் பொதுச் சேவை நட்­சத்­தி­ரப் பதக்கம் (கொவிட்-19), பொதுச் சேவை நிர்­வா­கப் பதக்­கம் (கொவிட்-19), வீரப்­ப­தக்­கம் (கொவிட்-19), பாராட்­டுப் பதக்­கம் (கொவிட்-19), பொதுச் சேவைப் பதக்­கம் (கொவிட்-19), அதி­ப­ரின் பாராட்­டுச் சான்­றி­தழ் (கொவிட்-19) ஆகி­யவை அடங்­கும்.