கொவிட்-19 தாக்­கத்தை நிர்­வ­கிக்க உதவினார்

கொவிட்-19 தாக்­கத்தை நிர்­வ­கிக்க உதவினார்

1 mins read
c2c91c0f-6d73-49bd-9ee8-143636aa1ac2
-

தேசிய அள­வில் தடுப்­பூ­சித் திட்­டத்தை நடை­முறைப்­ப­டுத்­தி­ய­தில் முதன்மை பங்­காற்­றி­ய­வர் திரு தினேஷ் வாசு தாஸ் (படம்).

கொவிட்-19க்கு எதி­ராக சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொ­கைக்­குத் தடுப்­பூசி போடும் முயற்­சி­கள் இதற்­கு­முன் கண்­டி­ராத அள­வுக்கு வேக­மா­க­வும் விரி­வா­க­வும் நடந்­த­தென நினை­வு­கூர்ந்­தார் திரு தினேஷ், 48.

தடுப்­பூசி நிலை­யங்­களை விரை­வா­கத் தயார்­ப­டுத்­து­தல், தடுப்­பூ­சி­க­ளைச் சரி­யான தட்­ப­வெப்ப நிலை­யில் வைத்­தி­ருத்­தல், குறித்த நேரத்­தில் தடுப்­பூசி­யைப் போட்டு முடித்­தல் போன்ற பல்­வேறு கூறு­களில் கவ­னம் செலுத்த வேண்டி இருந்­த­தாக சுகா­தார அமைச்­சின் நெருக்­க­டி­கால உத்­தி­பூர்வ, செயல்­பாட்­டுக் குழு இயக்­கு­நரு­மான அவர் குறிப்­பிட்­டார்.

மக்­க­ளுக்­குத் தடுப்­பூ­சி­யின் பாது­காப்­பை­யும் செயல்­தி­றத்­தை­யும் உணர்த்த விரி­வான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இவர் ஆற்­றிய பங்­க­ளிப்­பால் இது­வரை 17 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட கொவிட்-19 தடுப்­பூசி­கள் போடப்­பட்­டுள்­ளன.

கொள்­ளை­நோ­யின் மூன்­றாண்டு காலத்­தில் தாம் அதி­கம் பெரு­மைப்­ப­டக்­கூ­டிய ஒரு சாதனை இது என்­றார் அவர்.

திரு தினே­ஷு­டன் மேலும் 31 பேருக்கு 'பொதுச் சேவை நட்­சத்­தி­ரப் பதக்­கம்' (கொவிட்-19) வழங்­கப்­ப­ட­வுள்­ளதாக தெரிவிக்கப்பட்டது.