சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோருக்கு புதிய நடைமுறை

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோருக்கு புதிய நடைமுறை

2 mins read

கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவு ஜனவரி 1 முதல்

சிங்­கப்­பூர், தாய்­லாந்து, ஹாங்­காங், சீனா, ஜப்­பான், தென்­கொ­ரியா, ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து இந்­தியா செல்­வோர், தங்­க­ளுக்கு 'கொவிட்-19 தொற்று இல்லை' என்ற பரி­சோதனை முடிவை வழங்க வேண்­டும் என்று இந்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

இந்த நாடு­க­ளி­லி­ருந்து இந்­தியா செல்­வோர், பய­ணத்­துக்கு முன்பு 'ஏர் சுவிதா' இணை­யத்­தளத்­தில் பரி­சோ­தனை முடி­வு­களைப் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும் என்று டுவிட்­ட­ரில் அவர் கூறி­னார்.

"உல­கம் முழு­வ­தும், குறிப்­பாக, மேற்­கண்ட இந்த நாடு­களில் உள்ள கொவிட்-19 நில­வ­ரத்­தைக் கருத்­தில்­கொண்டு இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது," என்று இந்­திய சுகா­தார அமைச்சு அதன் அறிக்­கை­யில் கூறி­யது.

இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு 72 மணி நேரத்­திற்­குள் பரி­சோ­த­னை­யைச் செய்­திருக்க வேண்­டும் என்று அமைச்சு விளக்­கி­யது. இந்­தி­யா­வைச் சென்­ற­டை­யும் அனைத்­து­ல­கப் பய­ணி­களில் இரண்டு விழுக்­காட்­டி­னர் மீது கிருமி பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்­குக் கூடு­த­லாக இந்­தப் புதிய கொவிட்-19 பரி­சோதனை நடை­மு­றை­யும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­களுக்கு கொவிட்-19 பரி­சோ­த­னை­யைக் கட்­டா­ய­மாக்­கு­வ­தில் அமெ­ரிக்கா, ஜப்­பான், இத்­தாலி, தைவான் ஆகிய நாடு­க­ளு­டன் இப்­போது இந்­தி­யா­வும் சேர்ந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் புதி­தாக 268 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்­சின் நேற்­றைய தரவு தெரி­விக்­கிறது. டிசம்­பர் 2ஆம் தேதிக்­குப் பிறகு பதி­வான ஆக அதிக எண்­ணிக்கை இது.

அடுத்த 40 நாள்­களில் இந்­தி­யா­வின் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை உய­ரும் என்று நிபு­ணர்­கள் முன்­னு­ரைத்­துள்­ள­னர். இந்­நி­லை­யில் மக்­கள் விழிப்­பு­நி­லை­யில் இருக்­கு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

ஓமிக்­ரான் கிரு­மி­யின், 'பிஎஃப்.7' துணைத் திரி­பால் தற்­போது இந்­தி­யா­வில் அதி­க­மான கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதில் மித­மான பாதிப்பே இருந்­தா­லும், கிருமி அலையை ஏற்­ப­டுத்­தும் தன்மை இந்­தத் துணைத் திரி­புக்கு உண்டு என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், இது தொற்­றக்­கூடிய சாத்­தி­யம் அதி­கம் என்று சுகா­தார அமைச்சு கூறு­கிறது.

இந்­நி­லை­யி­லும், சீனா போன்ற மோச­மான கொவிட்-19 நில­வ­ரம் இந்­தி­யா­வில் ஏற்­ப­டாது என்று நிபு­ணர்­கள் உறு­தி­ய­ளித்­துள்­ள­னர்.

தொடர்ந்து, நாட­ள­வில் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வளா­கங்­க­ளி­லும் பாவ­னைப் பயிற்­சி­கள் நடந்­து­வ­ரு­கின்­றன.

இதற்­கி­டையே, புதிய கிரு­மித்­தொற்று அலை­யால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் அதன் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை சீனா தளர்த்­தி­யுள்­ள­தற்கு ஏற்ப எவ்­வாறு செயல்­ப­ட­லாம் என்­பது குறித்து ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தைச் சேர்ந்த உயர்­மட்ட சுகா­தார அதி­கா­ரி­கள் ஆலோ­சித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.