தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இனவாதக் கருத்து கூறிய முன்னாள் விரிவுரையாளருக்கு சிறை, அபராதம்

1 mins read
2c35a964-0daa-44f7-a7a9-e9130e7c5824
-

ஆர்ச்­சர்ட் சாலை­யில் கடந்த ஆண்டு கலப்­பின தம்­ப­தி­ய­ரி­டம் இன­வா­தக் கருத்­து­கள் கூறிய நீ ஆன் பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூ­ரி­யின் முன்­னாள் மூத்த விரி­வு­ரை­யா­ளர் டான் பூன் லீக்கு நேற்று ஐந்து வாரச் சிறைத்­தண்­ட­னை­யும் $6,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

அவர் இன­வா­தக் கருத்­து­களைக் கூறி­ய­தைக் காட்­டும் காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­னது.

முன்­ன­தாக டான், 61, இரு குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார். இன­ரீ­தி­யாக தனி­ம­னி­த­ரின் உணர்வு­க­ளைக் காயப்­ப­டுத்­தி­ய­தாக ஒரு குற்­றச்­சாட்­டை­யும் ஆபா­சப் படங்­களை வைத்­தி­ருந்­த­தாக மற்­றொரு குற்­றச்­சாட்­டை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

நீ ஆன் பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூ­ரி­யின் பொறி­யி­யல் துறை­யில் விரி­வு­ரை­யா­ள­ராக இருந்த டான், 2021 ஜூன் 5ஆம் தேதி, திரு தேவ் பர்­காஷ் என்­ப­வரை நோக்கி இன­வா­தக் கருத்­து­க­ளைக் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ர­ரான திரு பர்­காஷ், பாதி இந்­திய, பாதி பிலிப்­பீனோ இனத்­தைச் சேர்ந்­த­வர். அப்­போது தம்­மு­டைய காதலி ஜேக்­கு­லின் ஹோவு­டன் அவர் இருந்­தார்.

ஆர்ச்­சர்ட் பொலி­வார்ட்­டில் உள்ள கார் நிறுத்­து­மி­டத்தை நோக்கி அந்­தத் தம்­பதி நடந்து சென்­று­கொண்­டி­ருந்­த­போது டானும் அவர்­களும் சந்­திக்க நேரிட்­டது.

"என்ன ஓர் அவ­மா­னம், இந்­திய ஆட­வ­ரு­டன் சீனப் பெண்," என்று தம்­ப­தியை நோக்கி டான் கூறி­னார்.

அதைத் தொடர்ந்து ஏற்­பட்ட வாக்­கு­வா­தத்தை குமாரி ஹோ காணொ­ளி­யில் பதி­வு­செய்­தார். அந்த ஒன்­பது நிமி­டக் காணொளியை திரு பர்­காஷ் ஃபேஸ்புக் தளத்­தில் பகிர்ந்­ததைத் தொடர்ந்து இந்த விவ­கா­ரம் வெளிச்­சத்­துக்கு வந்­தது.