கார் விபத்தில் காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்

கார் விபத்தில் காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்

2 mins read

இந்­திய கிரிக்­கெட் குழு­வின் விக்­கெட் காப்­பா­ள­ரும் பந்­த­டிப்­பா­ள­ரு­மான ரிஷப் பன்ட் நேற்று காலை சாலை விபத்­தில் சிக்கி காய­ம­டைந்­தார். இந்த விபத்து உத்­த­ராகண்ட் மாநி­லத்­தில் உள்ள ரூர்கீ நக­ரில் இந்­திய நேரப்­படி நேற்று அதி­காலை 5.30 மணி அள­வில் நிகழ்ந்­தது.

ரிஷப் பன்ட் ஓட்­டிச் சென்ற மெர்­ச­டிஸ் பென்ஸ் கார், சாலை தடுப்­பின் மீது மோதி தீப்­பி­டித்­து­கொண்­ட­தாக தி இந்து நாளி­

த­ழி­டம் ஹரி­து­வார் நக­ரின் காவல்­துறை மூத்த கண்­கா­ணிப்­பா­ளர் அஜெய் சிங் தெரி­வித்­தார். பன்ட்­டின் தலை­யி­லும் காலி­லும் காயங்­கள் ஏற்­பட்­டன. ரிஷப் பன்ட் முத­லில் ரூர்கீ நக­ரில் உள்ள மருத்து­வ­ ம­னைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டார். அங்கு அவ­ருக்கு முத­லு­தவி அளிக்­கப்­பட்­டது. பிறகு அவர் டேரா­டுன் நக­ரில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­பட்­ட­தாக உத்­த­ரா­கண்ட் மாநில முதல்­வர்

அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

ரிஷப் பன்ட் தமது காரை அதி­வே­க­மாக ஓட்­டிச் சென்­ற­தால் கட்­டுப்­பாடு இழந்து சாலைத் தடுப்பு மீது மோதி­ய­தாக காவல்­துறை தெரி­வித்­தது. ஆனால் சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அந்த நெடுஞ்­

சா­லை­யில் மூடு­பனி அதி­க­மாக இருந்­த­தாக சிலர் கூறி­னர். சம்­ப­வம் நிகழ்ந்­த­போது ரிஷப் பன்ட் தனி­யாகப் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்­தார். அவர் டெல்­லி­யி­லி­ருந்து ரூர்­கீ­யில் உள்ள தமது வீட்­டிற்­குச் சென்­று­கொண்­டி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

"ரிஷப் பன்ட் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி­னார். அவ­ரது கார் சாலைத் தடுப்­பின் மீது மோதி­ய­தால் கார் கண்­ணா­டி­கள் உடைந்­தன. இத­னால் அவ­ரால் சுய­மா­கவே காரி­லி­ருந்து வெளி­யேற முடிந்­தது. சம்­பவ இடத்­தில் இருந்த சில வழிப்­போக்­கர்­கள் அவ­ருக்கு உத­வி­னர். தக­வல் கிடைத்­த­தும் காவல்­துறை சம்­பவ இடத்­துக்கு விரைந்­தது. விபத்து நிக­ழந்த சில நிமி­டங்­களில் கார் தீப்­பி­டித்­துக்­கொண்­டது," என்று காவல்­துறை மூத்த கண்­கா­ணிப்­பா­ளர் அஜெய் சிங் தெரி­வித்­தார்.