எரிவாயு தீச்சம்பவத்தில் இந்தியர் உயிரிழப்பு: 2022இன் 46வது வேலையிட மரணம்

எரிவாயு தீச்சம்பவத்தில் இந்தியர் உயிரிழப்பு: 2022இன் 46வது வேலையிட மரணம்

2 mins read

எண் 21 துவாஸ் அவென்யூ 3ல் நேற்று முன்­தி­னம் ஏற்­பட்ட தீச்­சம்­ப­வத்­தில் 38 வயது இந்­திய நாட்­ட­வர் உயி­ரி­ழந்­தார். 2022ஆம் ஆண்­டில் வேலை­யி­டத்­தில் ஏற்­பட்ட 46வது உயி­ரி­ழப்பு இது.

சம்­பவ நாளில் காலை 9.25 மணிக்கு மூண்ட தீக்கு, அந்த வளா­கத்­தில் 'அசிட்­டி­லின்' எனும் எளி­தில் தீப்­பற்­றக்­கூ­டிய வாயு கட்­டுக்­க­டங்­கா­மல் வெளி­யே­றி­யது கார­ணம் என்று முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­த­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது.

அதே நாளில் காலை 9.50 மணி­ய­ள­வில் தீ கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இச்­சம்­ப­வத்­தில் காய­முற்ற மற்­றோர் ஊழி­யர் 43 வயது சீன நாட்­ட­வர். அவர் சுய­நி­னை­வு­டன் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார்.

தீப்­பற்­றக்­கூ­டிய வாயு உரு­ளை­க­ளைச் சரி­பார்ப்­பது தொடர்­பான அனைத்து நட­வடிக்­கை­களை­யும் நிறுத்­தும்­படி 'ஏஷியா டெக்­னி­கல் கேஸ்' நிறு­வ­னத்­திற்கு மனி­த­வள அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

"எளி­தில் தீப்­பற்­றக்­கூ­டிய வாயுக்­க­ளைக் கொண்ட கலன்­க­ளைக் கையா­ளும்­போது, அவ்­வாயு திரள்­வ­தைத் தவிர்க்­க­வும் அந்த இடத்­தில் தீப்­பி­டிக்­கும் பொருள்­கள் ஏதும் இல்­லா­மல் இருப்­பதை உறு­தி­செய்­ய­வும் உரிய நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­பட வேண்­டும்," என்று அமைச்சு அறி­வு­றுத்­தி­யது.

வேலை­யி­டத்­தில் பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை தர­வேண்­டும் என்­பதை முத­லா­ளி­க­ளுக்கு நினை­வு­றுத்­திய மனி­த­வள அமைச்சு, பெரிய அள­வி­லான பாது­காப்­புக் குறை­பா­டு­கள் கண்­ட­றி­யப்­பட்­டால் நிறு­வ­னங்­கள் அதற்­குப் பொறுப்­பேற்க வேண்­டும்.

அதன் தொடர்­பில் அப­ரா­தம், வேலை நிறுத்த உத்­த­ரவு, வெளி­நாட்டு ஊழி­யரை வேலைக்கு அமர்த்­து­வ­தற்கு கட்­டுப்­பாடு போன்­ற­வற்றை முத­லா­ளி­கள் எதிர்­நோக்க நேரி­டும் என்று அது நினை­வு­ப­டுத்­தி­யது.

இந்தச் ­சம்­ப­வத்­தை­யும் சேர்த்து சென்ற ஆண்டு 46 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கின.

இந்த எண்­ணிக்கை, 2016க்குப் பிறகு ஆக அதி­க­மா­கும். அப்­போது 66 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கி­யி­ருந்­தன.