ஆஸ்திரேலியா: ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

ஆஸ்திரேலியா: ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

1 mins read
f53580d3-28de-4d05-a941-8c839a17320d
-

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இரண்டு ஹெலி­காப்­டர்­கள் நேருக்கு நேர் மோதிக்­கொண்­ட­தில் நால்­வர் உயி­ரி­ழந்­த­னர்.

அவ்­விரு ஹெலி­காப்­டர்­களில் இருந்த மற்ற ஒன்­பது பய­ணி­களும் காய­ம­டைந்­த­னர். அவர்­களில் ஒரு பெண்­ணும் இரு சிறு­வ­ரும் கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மாண்டுபோன நால்வரும் படுகாயமடைந்த மூவரும் ஒரே ஹெலிகாப்டரைச் சேர்ந்தவர்கள் என்று குவீன்ஸ்லாந்து காவல்­துறை ஆய்­வா­ளர் கேரி வோரல் குறிப்­பிட்­டார்.

கோல்டு கோஸ்ட் பகு­தி­யில் 'சீ வோர்ல்டு' கருப்­பொ­ருள் பூங்­கா­விற்கு அருகே நேற்று பிற்­ப­க­லில் இவ்­வி­பத்து நிகழ்ந்­தது.

ஒரு ஹெலி­காப்­டர் மேலே­எழும்­பத் தொடங்­கிய நிலை­யில், இன்­னொரு ஹெலி­காப்­டர் தரை­யி­றங்­கி­ய­தால் இவ்­வி­பத்து நிகழ்ந்­த­து­போல் தெரி­கிறது என்று குவீன்ஸ்­லாந்து காவல்­துறை தெரி­வித்­தது.

பத்­தி­ர­மா­கத் தரை­யி­றங்­கிய ஹெலி­காப்­ட­ரின் முன்­பக்­கக் கண்­ணாடி நொறுங்­கி­விட்­டது. விபத்­தில் சிக்­கிய இன்­னொரு ஹெலி­காப்­டர் தலைக்­குப்­பு­றக் கவிழ்ந்­தது நொறுங்­கி­யது.

கடற்­ப­கு­திக்­குள் இருக்­கும் மணற்­திட்­டில் ஹெலி­காப்­டர்­கள் விழுந்­த­தால் அங்கு செல்­வது கடி­ன­மாக இருந்­தது என்று திரு வோரல் குறிப்­பிட்­டார்.

நடு­வா­னில் நிகழ்ந்த இந்த வி­பத்து தொடர்­பில் ஆஸ்­தி­ரேலி­யப் போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்­புச் செய­ல­கம் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.