தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் இன்னமும் கள்ளநோட்டு புழக்கம், பாதிப்பு

1 mins read

இந்­தி­யா­வில் இன்­ன­மும் கள்­ள­நோட்­டு­கள் புழங்­கு­வ­தா­க­வும் அது பொரு­ளி­ய­லுக்குப் பெரும் சவா­லா­கத் தொடர்­வ­தா­க­வும் தேசிய குற்­றச்செயல் கட்­டுப்­பாட்டு இலா­கா­வின் அறிக்கை கவலை தெரி­விக்­கிறது.

அந்த நாட்­டில் கள்­ள­நோட்டை ஒழிக்­கும் நோக்­கத்­தில் 2016ல் புழக்­கத்­தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்­டு­கள் செல்­லாது என்று அறி­விக்­கப்­பட்­டது.

அந்த நட­வ­டிக்­கையை சில நாள்­க­ளுக்கு முன் உச்­ச­நீ­தி­மன்றம் உறு­திப்­ப­டுத்­தி­யது.

பண­ம­திப்­பி­ழப்பு நட­வடிக்கைக்குப் பிறகு நாட்­டில் பணப்­புழக்கம் இரு மடங்­காகி உள்ளதாக மத்­திய வங்­கி­யின் புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறின.

இந்­தி­யா­வில் 2016ல் ரூ.17 லட்­சம் கோடி மதிப்­புள்ள நாண­யம் புழக்­கத்­தில் இருந்­தது. அது சென்ற ஆண்டு டிசம்­பர் 23ஆம் தேதி வாக்­கில் ரூ.32.4 லட்­சம் கோடி­யாக பெரு­கி­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்டது.

இந்­நி­லை­யில், கடந்த 2016க்குப் பிறகு நாட்­டில் ரூ.245.33 கோடி மதிப்­புள்ள கள்­ளப்­ப­ணம் கைப்­பற்­றப்­பட்டு இருப்­ப­தாக அந்த இலாகா அறிக்கை தெரி­வித்­துள்­ளது. 2020ஆம் ஆண்­டில்­தான் ஆக அதி­க­மாக ரூ.92.17 கோடி மதிப்­புள்ள கள்­ளப்­ப­ணம் கைப்­பற்­றப்­பட்­டது.

இது பொரு­ளி­ய­லுக்­குப் பெரும் சவா­லாக இருப்­ப­தாக அறிக்கை கூறி­யது.