பிரபல மின் வர்த்தக நிறுவனமான அமேசான் 18,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கிறது.
திட்டமிட்ட எண்ணிக்கையைவிட இது அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஏறத்தாழ 10,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தொழில்நுட்ப நிறுவனங்
களின் வர்த்தகம், வருமானம் வீழ்ச்சி அடைந்திருப்பதை இது காட்டுவதாகத் தெரிவிக்கப்
பட்டுள்ளது. ஆட்குறைப்பு குறித்த தகவலை அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெசி நேற்று முன்தினம் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டிலிருந்து அமேசான் தனது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இம்மாதம் 18ஆம் தேதியன்று கலந்துரையாடப்படும் என்று நம்பப்படுகிறது. சில்லறை வர்த்தக, மனிதவளப் பிரிவுகளில் பலர் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றனர்.

