ஈராண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு தைப்பூச ஊர்வலம்

பல்லாயிரக்கணக்கானோர் மீண்டும் ஒன்றுகூடுவர் என எதிர்பார்ப்பு

சிங்­கப்­பூ­ரில் தைப்­பூ­சத் திரு­விழா பிப்­ர­வரி மாதம் 5ஆம் தேதி கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பக்­தர்­கள் காவ­டி­க­ளு­ட­னும் பால்­கு­டங்­க­ளு­ட­னும் இவ்­வாண்டு நடை ஊர்­வ­லம் செல்­ல­லாம்.

ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லில் தொடங்கி அருள்மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லில் முடி­வ­டை­யும் நடை ஊர்­வ­லம் பிப்­ர­வரி 4ஆம் தேதி இரவு 11.30 மணி­ய­ள­வில் தொடங்­கும்.

மறு­நாள் 5ஆம் தேதி இரவு 11 மணி வரை அந்த ஊர்­வ­லம் நடை­பெற அனு­ம­தி உண்டு.

3.2 கிலோ­மீட்­டர் தூரத்­திற்­கான இந்த நடை ஊர்­வ­லம் சிராங்­கூன் சாலை­யில் தொடங்கி சிலிகி, பிராஸ் பாசா, ஆர்ச்­சர்ட் சாலை­கள் வழி­யாக தேங் சாலை­யில் நிறை­வ­டை­யும்.

ஆண்­டு­தோ­றும் கொண்­டா­டப்­படும் இத்­தி­ரு­விழா கொவிட்-19 நோய்த்­தொற்று சூழ­லால் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளுக்கு உட்­பட்டு எளிய முறை­யில் நடை­பெற்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தைப்­பூ­சம் தொடர்­பான நுழை­வுச்­சீட்­டு­களை இம்­மா­தம் 4ஆம் தேதி­யி­லி­ருந்து பிப்­ர­வரி மாதம் 3ஆம் தேதி வரை பெற­லாம்.

பால்­கு­டத்­திற்­கான நுழை­வுச்­சீட்­டு­களை www.thaipusam.sg இணை­யத்­தளத்தில் மட்­டுமே பெற முடி­யும். கோவி­லில் தயா­ரிக்­கப்­படும் பால்­கு­டத்­தின் கட்­ட­ணம் 20 வெள்­ளி­யும் சுய­மாக தயா­ரிக்­கப்­படும் பால்­கு­டத்­தின் கட்­ட­ணம் 15 வெள்­ளி­யும் ஆகும்.

பால்கா­வடி மற்­றும் தொட்­டில் காவ­டி­க­ளுக்­கான நுழை­வுச்­சீட்­டு­களை கோயில்­களில் மட்­டுமே பெற முடி­யும். மேலும், ரதக்­கா­வடி மற்­றும் அலகுக் காவடி நுழை­வுச்­சீட்­டு­களை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெரு­மாள் கோயி­லில் மட்­டுமே பெற முடி­யும். இக்­கோ­யில்­களில் இந்

­நு­ழை­வுச்­சீட்­டு­களை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை­யி­லும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை­யி­லும் பெற­லாம்.

இத்­தி­ரு­வி­ழாவை இந்து அறக்­கட்­டளை வாரி­ய­மும் அருள்மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லும் ஸ்ரீ ஸ்ரீநி­வாசப் பெரு­மாள் கோயி­லும் இணைந்து நடத்­து­கின்­றன. இவ்­வி­ழா­வில் கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­ச­ரும் சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான எட்­வின் டோங் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்துகொள்­வார்.

“இவ்­வி­ழாவை கோயில் நிகழ்­வென்று பாரா­மல் ஒட்டுமொத்த இந்து சமூ­கத்­தின் விழா­வாகப் பார்க்கவேண்­டும்.

"இத்­தி­ரு­விழா இரண்­டாண்­டு­

க­ளுக்­குப் பின்­னர் சிறப்பான முறை­யில், ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ள­தால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்­து­கொள்­வார்­கள் என்று எதிர்­பார்க்­கி­றோம்.

"பக்­தர்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்து வச­தி­களுக்கான ஏற்­பா­டு­களும் நடை­பெற்று வரு­கின்­றன," என்று கூறி­னார் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி த. ராஜ­சே­கர். அதிக அள­வி­லான பக்­தர்­க­ளின் வரவைக் கணக்­கில் கொண்டு விழா­வன்று பக்­தர்­

க­ளுக்கு உதவ பல தொண்­டூ­ழி­யர்­களை ஏற்­பாடு செய்­துள்­ளோம்.

"உணவு, தண்­ணீர் மற்­றும் இதர வச­தி­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. பக்­தர்­கள் அனை­வ­ரும் மகிழ்­வு­டன் கலந்­து­ கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்

கிறோம்,” என்று கூறி­னார்

அருள்மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லின் துணைத் தலை­வர் ராம­சாமி மெய்­யப்­பன்.

இவ்­வாண்டு 10,000த்திற்­கும் மேற்­பட்ட பால்­கு­டங்­களும் 200க்கும் மேற்­பட்ட காவ­டி­களும் பக்­தர்­க­ளால் எடுக்­கப்­படும் என்­றும் 20,000 பக்­தர்­கள் கலந்­து­கொள்­வார்­கள் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர். ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு விரிவான முறை­யில் தைப்­பூ­சம் கொண்­டா­டப்­ப­டு­வதை பக்­தர்­களும் ஆவ­லு­டன் எதிர்­நோக்­கு ­கின்­ற­னர்.

மோனலிசா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!