இரவில் மூண்ட தீயில் கருகிய கட்டடங்கள்; ஒருவர் காயம்

இரவில் மூண்ட தீயில் கருகிய கட்டடங்கள்; ஒருவர் காயம்

1 mins read
c7c3f9e4-fdf0-4eee-ad3a-2f84ae86ecab
-
multi-img1 of 2

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்­டில் உள்ள குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களில் திங்­கட்­கி­ழமை மூண்ட தீயில் ஒரு­வர் இலே­சான காயங்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். 12எஸ் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்­டில் உள்ள கட்­ட­டத்­தில் தீப்­பற்றி எரி­வ­தாக இரவு 11 மணியளவில் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறியது. சம்­பவ இடத்தை அடை­யும் முன்­னர் தீ வேக­மா­கப் பர­வி­ய­தில் அரு­கி­லி­ருந்த நான்கு மொட்டை மாடிக் கட்­ட­டங்­களும் பாதிக்­கப்­பட்­டன.

தீய­ணைப்­பா­ளர்­கள், பாது­காப்புக் கருதி அந்­தக் கட்­ட­டங்­களில் இருந்த 20க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­களை வெளி­யேற்­றி­ன­னர். கட்­ட­டங்­க­ளின் உச்­சிக்­குச் செல்­லக்­கூ­டிய அடுக்கு ஏணி­க­ளைப் பயன்­ப­டுத்தி அவர்­கள் தீய­ணைப்பு முயற்­சி­களில் ஈடு­பட்­ட­னர். அதன் பல­னாக பின்­னி­ரவு 1.20 மணி­ய­ள­வில் தீ கட்­டுக்­குள் வந்­தது. மேலும் இரு மொட்டை மாடிக் கட்­ட­டங்­க­ளி­லும் சேதம் காணப்­பட்­டது.

தீ அணைக்­கப்­பட்ட பிற­கும் அனல் கக்­கும் பகு­தி­க­ளின்­மீது நீர் பீய்ச்சும் பணி தொடர்­வ­தாக பின்­னி­ரவு 2.40 மணி­ய­ள­வில் குடி­மைத் தற்­காப்­புப் படை தனது ஃபேஸ்புக்­கில் குறிப்பிட்டது. தீப்­பி­டித்­ததற்­கான கார­ணம் விசா­ரிக்­கப்­ப­டு­கிறது.