விசா ரத்து: பழிவாங்கும் நடவடிக்கையில் சீனா

விசா ரத்து: பழிவாங்கும் நடவடிக்கையில் சீனா

3 mins read

முதற்கட்டமாக தென்கொரிய, ஜப்பானியப் பயணிகளுக்குத் தடை

தனது நாட்­டைச் சேர்ந்­தோ­ருக்கு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் விதித்த நாடு­க­ள்மீதான பழி­தீர்க்­கும் நட­வ­டிக்­கையை சீனா தொடங்கி உள்­ளது. முதற்கட்டமாக தென்­கொ­ரி­யா­வை­யும் ஜப்­பா­னை­யும் சேர்ந்த சுற்­றுப் பய­ணி­க­ளுக்­கான குறு­கிய கால அனு­ம­திக்கான விசாரவை அது தற்­கா­லி­ க­மாக நிறுத்தியுள்­ளது.

சுற்­றுப் பய­ணம், வர்த்­த­கப் பய­ணம், மருத்­து­வப் பய­ணம், இடை­வழி மாறு­தல் பய­ணம் மற்­றும் தனிப்­பட்ட பய­ணங்­

க­ளுக்கு குறு­கிய கால விசா வழங்­கு­வதை தென்­கொ­ரி­யா­வில் உள்ள சீனத் தூத­ர­கம் நேற்று (செவ்­வாய்க்­கி­ழமை) முதல் நிறுத்­தத் தொடங்­கி­ய­தாக தலை­

ந­கர் சோலில் உள்ள சீனத் தூத­ரக அலு­வ­ல­கம் கூறி­யது. சீனா­வைக் குறி வைத்து பார­பட்­ச­மான முறை­யில் விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­களை தென்­கொ­ரியா தளர்த்­தி­னால் குறு­கிய கால விசா தடை நீக்­கப்­படும் என்­றும் அது தெரி­வித்­தது.

தென்­கொ­ரிய வெளி­யு­றவு அமைச்­சர் பார்க் ஜின்னை தொலை­பேசி வாயி­லா­கத் தொடர்­பு­கொண்ட சீன வெளி­யு­றவு அமைச்­சர் குய்ன் காங், கட்­டுப்­பா­டு­கள் தொடர்­பாக தமது கவ­லையை வெளி­யிட்­டார். இச்­சம்­ப­வம் நடை­பெற்ற மறு­நாளே தென்­கொ­ரி­யப் பய­ணி­க­ளுக்­கான தடையை சீனா அறிவித்துள்ளது.

ஆனால், சீனா­வி­லி­ருந்து வரு­வோ­ருக்­கான கட்­டுப்­பா­டு­களை தமது அர­சாங்­கம் கடு­மை­யாக்­கி­யது அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லா­னது என்று தென்­கொ­ரிய வெளி­யுறவு அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.

சீனா­வி­லி­ருந்து வரு­வோர் 'பிசி­ஆர்' பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டும் என்ற கட்­டுப்­பாட்டை தென்­கொ­ரியா கடந்த வாரம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. சீனா­வுக்­கான விமான எண்­ணிக்­கை­யைக் குறைத்­த­தோடு தற்­போ­தைய விமா­னங்­கள் அனைத்­தும் ஒரே விமான நிலை­யத்­தில் சேவை­யாற்­றும் வகை­யில் மாற்­றங்­களை தென்­கொ­ரியா செயல்­ப­டுத்­தி­யது.

இதற்­கி­டையே, ஜப்­பா­னி­யர்­க­ளுக்­கும் விசா வழங்­கு­வதை சீனா தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்­ள­தாக கியோடோ செய்தி குறிப்­பிட்­டது. சுற்­றுப்­ப­ய­ணத் துறை­யைச் சேர்ந்த அடை­யா­ளம் தெரி­யாத சிலரை மேற்­கோள் காட்டி அது இந்­தத் தக­வலை வெளி­யிட்­டது.

சீனா­வி­லி­ருந்து வரு­வோ­ருக்கு தொற்­றில்லை சான்­றி­தழ் அளிப்­பது போன்ற கட்­டுப்­பா­டு­களை அண்­மைய நாள்­க­ளாக உல­கின் பல நாடு­கள் அறி­மு­கப்­ப­டுத்தி வரு­வ­தற்­குப் பழி­வாங்­கத் தொடங்கி இருப்­ப­தையே இந்­தத் தடை­கள் உணர்த்­து­கின்­றன. இது 'பார­பட்­ச­மான செயல்' என்று சீன வெளி­யுறவு அமைச்­சின் பேச்­சா­ள­ரான வாங் வென்­பின் தெரி­வித்­தார்.

"இதே­போன்ற நட­வ­டிக்­கையை நாங்­களும் எடுப்­போம்," என்று கூறிய அவர் அது­பற்றி தெளி­வா­கத் தெரி­விக்­க­வில்லை.

சீனா பழி­தீர்க்க எந்­த­வொரு கார­ண­மும் இல்லை என்­றும் சுகா­தார நிபு­ணர்­

க­ளின் ஆலோ­ச­னைப்­ப­டியே கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் கடந்த வாரம் அமெ­ரிக்கா தெரி­வித்து இருந்­தது.

மலேசியாவில்

சிறப்பு வரிசை

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு சிறப்பு வரிசைப் பகுதியை குடிநுழைவுத் துறை ஏற்படுத்தும் என மலேசிய சுகாதார அமைச்சு நேற்று கூறியது. கிருமித்தொற்று அறிகுறி இருப்போர் சுகாதார அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு ஆர்டிகே-ஆன்டிஜென் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்றும் அது கூறியது.

இந்தியாவில் குறைவு

சீனாவில் கிருமிப் பரவல் அதிகரிப்பதைக் காரணம் காட்டி 3 வாரங்களுக்கு முன்னால் சீனப் பயணி களுக்குக் கட்டுப்பாடு விதித்த இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. மாறாக, அது குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 121 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.