'துணிவு' கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் மரணம்

'துணிவு' கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் மரணம்

1 mins read

நடி­கர் அஜித் நடித்­துள்ள துணிவு திரைப்­ப­டத்தை சென்னை ரோகிணி திரை­ய­ரங்­கில் பார்க்­கச்­சென்ற ரசி­கர் ஒரு­வர் உயி­ரி­ழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பூந்­த­மல்லி நெடுஞ்­சா­லை­யில் மெது­வா­கச் சென்­று­கொண்­டி­ருந்த லாரி மீது நட­னம் ஆடி­ய­வாறே கீழே குதித்­த­போது, 19 வயது இளை­ய­ருக்கு முது­குத்­தண்­டில் காயம் ஏற்­பட்­டது. அதை­ய­டுத்து கீழ்ப்­பாக்­கம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தார்.

மாண்ட இளை­யர், சிந்­தா­தி­ரிப்­பேட்டை ரிச்சி தெரு­வைச் சேர்ந்த பரத்­கு­மார் என்று காவல்­து­றை­யின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்த விபத்து குறித்து கோயம்­பேடு போக்­கு­வ­ரத்­துப் புல­னாய்­வுப் பிரிவு அதி­கா­ரி­கள் வழக்கு பதி­வு­செய்து விசா­ரணை நடத்­தி­வ­ரு­கி­றார்­கள்.

அஜித் நடித்­துள்ள துணிவு, விஜய் நடித்­துள்ள வாரிசு என இரு திரைப்­ப­டங்­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன. சிறப்­புக் காட்­சி­க­ளைப் பார்ப்­ப­தற்­காக நள்­ளி­ர­வி­லேயே இரு­த­ரப்பு ரசி­கர்­களும் திரை­ய­ரங்­கு­கள் முன்பு திரண்­டி­ருந்­த­னர். எட்டு ஆண்டு­க­ளுக்­குப் பிறகு இரு நடி­கர்­களின் திரைப்­ப­டங்­களும் ஒரே நேரத்­தில் வெளி­யா­கி­யுள்­ள­தால் அவர்­கள் ஆட்­டம், பாட்­டத்­து­டன் கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.