தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹொக்காய்டோ விபத்தில் சிங்கப்பூர் மாதும் நான்கு மாதக் குழந்தையும் உயிரிழப்பு

1 mins read
1685ed30-edcd-44de-8c4d-e6c04ed2de1e
-

ஜப்­பா­னின் ஹொக்­காய்டோ மாநிலத்­தில் நடந்த கார் விபத்­தில் 41 வய­தான சிங்­கப்­பூர் மாது ஒருவரும் அவ­ரின் நான்கு மாதப் பெண் குழந்­தை­யும் உயி­ரி­ழந்­ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமி­ஃபு­ரானோ நக­ரில் நேற்று முற்­ப­கல் 11.30 மணி­ய­ள­வில் இவ்­வி­ரு­வ­ரும் பய­ணம் செய்த கார், லாரி ஒன்­று­டன் நேருக்கு நேர் மோதி­ய­தாக சீன­மொழி நாளே­டான சாவ்­பாவ் தெரி­வித்­தது.

காரை மாதின் 44 வயதுக் கணவர் ஓட்டிச்சென்றதாகவும் விபத்தில் அந்த ஆடவரும் தம்­ப­தி­யின் மூன்று வய­து மூத்த மகளும் காய­ம் அடைந்­த­தாகவும் ஜப்­பா­னிய ஊட­கங்­கள் தெரிவித்துள்­ளன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகக் காவல்துறையினரை மேற்கோள்காட்டி சாவ்பாவ் தக­வல் வெளி­யிட்­டு உள்ளது,

கிளைச் சாலையிலிருந்து பனி நிறைந்த முக்கியச் சாலைக்குத் திரும்பியபோது கார், அந்த லாரியுடன் மோதியதாக ஏஎன்என் நியூஸ் செய்தி நிறுவனம் கூறியது.

விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.