ராஜபக்சே சகோதரர்கள் கனடா செல்வதற்குத் தடை

ராஜபக்சே சகோதரர்கள் கனடா செல்வதற்குத் தடை

1 mins read

இலங்­கை­யின் முன்­னாள் அதி­பர்­க­ளான மகிந்த ராஜ­பக்சே, கோத்­த­பாய ராஜ­பக்சே இரு­வ­ருக்­கும் கனடா பய­ணத்­தடை விதித்­துள்­ளது.

சகோ­த­ரர்­க­ளான இவ்­வி­ரு­வரும் உள்­நாட்­டுப் போரின்­போது மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டதை முன்­னிட்டு இவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தைத் துடைத்­தொ­ழித்த ராணுவ நட­வ­டிக்­கை­யின்­போது மகிந்த ராஜ­பக்சே இலங்­கை­யின் அதி­ப­ரா­க­வும் கோத்­த­பாய ராஜ­பக்சே நாட்­டின் தற்­காப்பு அமைச்­ச­ரா­க­வும் பொறுப்­பேற்று இருந்­த­னர்.

அந்த நட­வ­டிக்­கை­யின் இறு­திக் கட்­டத்­தில், இலங்­கை­யின் சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ்ச் சமூ­கத்­தைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 40,000 பொது­மக்­கள் கொல்­லப்­பட்­ட­தாக அனைத்­து­லக கவ­னிப்­பா­ளர்­கள் மதிப்­பிட்­டுள்­ள­னர்.

அதை­ய­டுத்து மேலை நாடு­கள் பல­வும் இலங்­கை­யின் ராணுவ உய­ர­தி­கா­ரி­க­ளுக்­குப் பய­ணத் தடை விதித்­தன. இருப்­பி­னும் ராஜ­பக்சே சகோ­த­ரர்­கள் மீது வலு­வான நட­வ­டிக்கை எடுத்­துள்ள முதல் நாடு கனடா.

அனைத்­து­ல­கச் சட்­டத்தை மீறு­வோர் அதன் பின்­வி­ளை­வு­களில் இருந்து தப்­பித்­துக்­கொள்­வதை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரு­வது நோக்­கம் என்று அது குறிப்­பிட்­டது.